பக்கம்:அழியா அழகு.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 அழியா அழகு

" போன படைத்தலை வீரர் தமக்கிரை

போதா, இச்

சேனை கிடக்கிடு; தேவர் வரிற்சில

மாமேகம்

சோன படக்குடர் சூறை படச்சுடர்

வாளோடும்

தானே படத்தனி யானை படத்திரள்

சாயேஞே!'

(படைத்தலை வீரர் - படையின் தலைவராகிய சிறந்த வீரர்; இராம இலக்குவர்கள். கிடக்கிடு - கிடக்கட்டும். சில மா மேகம் - வில்லாகிய பெரிய மேகம். தானே - சேன. திரள் - படைக்கூட்டம்.)

இராமன் காட்டுக்குச் செல்வதற்கு என்ன காரணம் என்பதைக் குகன் இலக்குவன் வாயிலாக அறிந்தவன். அவன், தான் கேட்டவற்றை ஒருவாறு மனத்திலே காட்சி களாகப் பதிவு செய்து வைத்திருக்கிருன். அவை நேரே கண்டவை அல்ல; இலக்குவன் வாய்மொழியால் உணர்ந்த வற்றின் விளைவு. "கைகேயியே தன் கையில் மரவுரியைக் கொண்டு வந்து இராமனுக்குக் கொடுத்தாள்' என்று இலக்குவன் சொன்னது இப்போது நினைவுக்கு வருகிறது. அந்தக் காட்சியை அகக் கண்ணில் காணுகிருன். அவனுடைய ஆருயிர் நாயகனகிய இராமனுக்கா மரவுரி? சேl என்ன கொடுமைl- குகன் பல்லேக் கடித்துக்கொண் டிருக்கவேண்டும்.

'தன்முன் பணிவாக கின்ற பிரான், பிறருக்கு வாரி வாரி வழங்கும் வள்ளல் ஆகிய என் அன்பன் இராமன் உடுக்க நீண்ட மரவுரியை அன்று நீதி: நேர்மை பா ராம ல் கொடுத்தாளே, அவளுடைய

1. குகப்படலம், 20.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/124&oldid=523326" இலிருந்து மீள்விக்கப்பட்டது