பக்கம்:அழியா அழகு.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 அழியா அழகு

"மாமுனி வர்க்குற வாகி வனத்திடை

யேவாழும்

கோமுனி யத்தகும் என்று மனத்திறை

கொள்ளாதே

ஏமுனை உற்றிடில் ஏழு கடற்படை

என்ருலும்

ஆமுனை யிற்சிறு கூழ்என இப்பொழு

தாகாதோ?' '

(கோ - அரசன், இராமன். இறை - சிறிதளவாவது. எ - அம்பு. எமுனே - அம்பினும் போர் செய்யும் களம். முனேயில் - முன்னிலேயில். சிறுகூழ் - இளம் பயிர்.1

குகனுடைய சீற்றக் குமுறலைக் கம்பன் பத்துப் பாடல் களில் சொல்லுகிருன். ஒருவருக்கு மற்ருெருவர்மேல் கோபம் வந்தால், கோபமுடையார் பேச்சு அடுத்தடுத்துக் கேள்விகளாகவே வரும் அந்த விளுக்கள் அம்புபோல ஒன்றன்பின் ஒன்ருக வரும். இந்த இயல்பைக் குகனுடைய பேச்சிலும் காணலாம். ஒவ்வொரு பாட்டும் வினுக்கள் கிறைந்ததாக இருக்கிறது. பத்துப் பாடல்களிலும் இருபது கேள்விகளை ஒன்றன்மேல் ஒன்ருக அடுக்குகிருன். கோப. உணர்ச்சிக்கு ஏற்ற சக்தம் வேறு, சுவையை மிகுவிக்கிறது.

2. குகப்படலம், 23

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/130&oldid=523332" இலிருந்து மீள்விக்கப்பட்டது