பக்கம்:அழியா அழகு.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குகன் மனமாற்றம்

குகன் தென்கரையில் கின்ருன். அக்கரையில் - வடகரையில் - பரதன் வந்துகொண் டிருந்தான், கூட்டத் தோடு, அந்தக் கூட்டத்துடன் வரும் சுமந்திரன் பரதனை அணுகிக் குகனைப் பற்றிச் சொன்னன், சிறந்த மந்திரி ஆதலின், இப்போது குகனுடைய உதவி இன்றியமையாதது என்பது புலப்படும்படியாகக் கூறினன். அவன் கங்கையின் இருகரைக்கும் தலைவன் என்றும், அளவற்ற ஒடங்களே உடையவன் என்றும் கூறியதோடு இராமனுக்குத் தோழன் என்பதையும் சொன்னன். அதைக் கேட்ட பரதன். 'அட்படியா என் தமையனுக்குத் தோழன? அப்படியால்ை அவன் எனக்குத் தமையனே. நானே அவனைப் போய்ப் பார்க்கிறேன்” என்று வேகத்துடன் புறப்பட்டுக் கங்கைக் கரையை அடைந்தான்.

சத்துருக்கனன் உடன்வர மிக்க அன்போடு ஒரு குன்று எழுந்து சென்ருற்போன்ற கோலத்தோடு கங்கைக்கரையை அடைந்து கின்ருன் பரதன். இப்போது தாளிபடலம் இல்லை. சுற்றியுள்ள படை அவன் உருவத்தை மறைக்க வில்லே. பரதனுடைய உருவமும் இளவலுடைய உருவமும் தெளிவாகக் குகனுக்குத் தெரிகின்றன. குகன் பார்த்தான்;. பரதனுடைய திருமேனி கிலேயை உணர்ந்தான்; அவனுக்குத் தூக்கி வாரிப்போட்டது.

குகன் இதுவரையில் சினத்தால் தன் மனத்தில் பரதனைக் கற்பனே செய்துகொண்ட முறையே வேறு. அவன் இராமனை மீட்டும் ஒட்டுவதற்காகவே படையுடன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/131&oldid=523333" இலிருந்து மீள்விக்கப்பட்டது