பக்கம்:அழியா அழகு.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குகன் மனமாற்றம் 125

கண்களும் கடுமை கொப்புளிக்கும் முகமும் உடையவகை வருவான் என்று சினத்தான் குகன். அந்த முகம் எப்படி, இருந்தது? பொலிவிழந்திருந்தது. அழகாக, சாந்தமாக, அன்பு கொப்புளிப்பதாக இருப்பதுதான் இப்போது துயரத்தால் மங்கி இருந்தது. தனக்குரிய கலைகளே இழந்த மதியைப்போல அம்முகம் தோற்றம் அளித்தது. ஒளி இழந்த அந்த முகத்தைத்தான் குகன் இப்போது கண்டான்.

வற்கலையின் உடையான

மாசடைந்த மெய்யானை கற்கலைஇல் மதி.என்ன

ககைஇழந்த முகத்தானே, [வற்கலை - மரவுரி. கலை - கிரணம், ஈகை - ஒளி.)

முகம் ஒளி இல்லாமல் இருப்பது மட்டும் அன்று. அது பரதனுடைய உள்ளத்தையும் எடுத்துக் காட்டியது. எல்லேயில்லாத துயரக்கடலே உள்ளடக்கி வைத்திருந்தான் பரதன். அது புறம்பொசிந்து முகத்திலே அலேயோடியது. கல்லும் கனியும்படி கனிந்து நெகிழ்ந்து வாடும் துயரமுடைய வளுகத் தோற்றினன். இந்தக் கோலத்தில் குகன் பரதனைக் கண்டான்.

கற்கனியக் கணிகின்ற

துயரானக் கண்ணுற்ருன்.

தன்னுடைய எண்ணத்துக்கு நேர்மாருகக் கற்கனியக் கனிகின்ற துயரான் நிற்பதைக் கண்டான் குகன். அவனுக்கு வெலவெலத்துப் போயிற்று, "இவனே விட்டேன. பார்' என்று குதித்த அவனுடைய கெஞ்சமும் இளகி விட்டது. அவனே அறியாமலே அவன் கையில் இருந்த வில் கழுவிக் கீழே விழுந்து விட்டது, இன்னது செய்வது என்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/133&oldid=523335" இலிருந்து மீள்விக்கப்பட்டது