பக்கம்:அழியா அழகு.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வியப்பும் உருக்கமும் 135

பெருமையானல், ஒருநாளும் தனக்குக் கிடைக்காதது கிடைக்க, அதனை ஒதுக்கிவிட்டது பன்மடங்கு பெருமை அல்லவா? ஆதலின் இராமனை விடப் பரதன் பெருமை மிக்கவன் ஆளுன். இவற்றை எண்ணியே குகன், "ஆயிரம் இராமர் உனக்கு ஒப்பாவார்களோ!' என்று வியந்தான். "நீ இப்படி வந்தாய் எனபதை எண்ணும்போதுதான் உன் பெருமை தெரிகிறது' என்ருன்.

மற்ருென்று: புறநானூற்றில் ஒரு பாட்டு வருகிறது. இழிவு, இழிவில் இழிவு; உயர்வு, உயர்வில் உயர்வு என்று கான்கு கருத்துகளைப் புலவர் சொல்கிருர்,

ஈயென இரத்தல் இழிந்தன்று; அதன்எதிர்

ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று:

கொள்எனக் கொடுத்தல் உயர்ந்தன்று அதன் எதிர்

கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று' என்று வருகிறது பாட்டு.

'பிறனுடைய குறையைக் குறிப்பால் அறிந்து குறையிலாப் பொருளுடையான் ஒருவன், "இதை ே பெற்றுக்கொள்' என்று அளிப்பது உயர்ந்த செயல். ஆனல் அப்படி ஒருவன் கொடுப்பதைக் கண்டு. "எனக்கு அது வேண்டாம்; கான் ஏற்கமாட்டேன்' என்று சொல்வது அதைவிட உயர்ந்த பண்பைக் குறிக்கும் செயல்' என்பது . பின் இரண்டடியின் பொருள்.

இதை வைத்துப் பார்த்தால், "என் பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்ற தன்ருே?" என்று தன் அரசைப் பரதன் கொள்க எனக் கொடுத்த இராமன் உயர்ந்தவன்தான். ஆனல் அப்படி அவன் கொடுத்த

1. புறதா, 204

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/143&oldid=523345" இலிருந்து மீள்விக்கப்பட்டது