பக்கம்:அழியா அழகு.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 அழியா அழகு

திருமேனி வண்ணம் இருளே வெல்வது; அல்லே ஆள் வது. அப்படியானல் இருளினும் மிக்க செறிவான கருமையா? அது அவனுக்குப் பொருந்துமா?' என்ற கேள்விகள் எழலாம். ஆம்; இருளினும் மிக்க கருமை: ஆனல் அது ஒளிதரும் கருமை. இரவின் கருமை ஒளியை அவித்த கருமை. இராமன் மேனி வண் ணமோ சுடர்விடும் கருமை. நீலமணியில் திகழும் ஒளிபோல அவன் மேனியில் தேசு பொலியும் அந்தத் தேசுடன் இருப்பதால்தான் அவனுடைய எழிலுக்குப் .ொருத்தமாக அக்கருமை அமைந்திருக்கிறது. அவன் அழகு, சுடர்விடும் கருவண்ணத்தால் அமைதி பெற்று நிலவுகிறது. அதனல், அல்லே ஆண்டு அமைந்த மேனி அழகன்' என்று கம்பன் பொருளுடைய சொற்களே அடுக்கி வைத்துக் காட்டுகிருன்.

அது சரி; நாயகனகிய இராமபிரானே அவ்வளவு அழகளுகப் பல சொற்களாலே சொல்லிவிட்டு அவனுக்கு எவ்வகையிலும் ஏற்ற துணைவியாகத் திகழும் பிராட்டியை அழகி என்றேனும் சொல்லியிருக்கலாமே; அவள் என்று ஒரு சுட்டுப்பெயரால் சொல்லிவிட்டானே. இது தகுமா? காயகனுக்கு ஏற்ற வகையில் நாயகியையும் வருணிப்பது தானே முறை? அல்லை ஆண்டு அமைந்த மேனி அழகன் என்று ஐந்து சொற்களால் புனேக்த இராமனுடைய எழில்தேவியை அவள் என்று மட்டும் சொல்லியிருப்பது ஒத்த சிறை உடையதென்று சொல்லமுடியாது. - இப்படி ஒர் ஐயம் எழ வகை உண்டு.

இந்தப் பாடல் குகனுடைய கூற்று. குகன், முன்பு கிகழ்ந்த நிகழ்ச்சியை இப்போது சொல்கிருன். இந்த இடத்தில் அவன் பண்பைக் குறிப்பாகப் பெற வைத் திருக்கிருன் கம்பன். வால்மீகி முனிவர் வேறு ஓரிடத்தில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/148&oldid=523350" இலிருந்து மீள்விக்கப்பட்டது