பக்கம்:அழியா அழகு.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குகன் பண்பு 14}.

வைத்துக் காட்டியிருக்கும் ஓர் அரிய கருத்தைக் கம்பன் இங்கே மிக மிக நுட்பமாக அமைத் திருக்கிருன்.

இராமனுடைய சீரிய குணங்கள் பலவற்றுள்ளும் சிறக்கது. அவன் ஒரே மனைவியை உடையவன் என்பது. பிறர் மனேவியை நோக்காக பெருமான் அவன். அவனுடன் காடு போந்த இளவலாகிய இலக்குவனும் அத்தகையவனே.

கிட்கிங்தையில் அநுமன் சீதாபிராட்டி கழற்றி, முடிச்சிட்டு எறிந்த கலன்களைக் கொண்டுவந்து இராம பிரான் முன்பு வைத்தான். அவற்றைத் தன் கண்ணிரால் அலம்பிச் சீதையை கினேந்து வருக்தின்ை இராமன். அப்பால் இலக்குவனே கோக்கி, 'தம்பி, இந்த நகைகளை உனக்கு அடையாளம் தெரிகிறதா?" என்று கேட்டான். இலக்குவன் அவற்றை ஒவ்வொன்ருகப் பார்த்தான். எல்லா வற்றையும் ஒதுக்கிவிட்டுக் காற்சிலம்பை மாத்திரம் சுட்டிக் காட்டி, இது பிராட்டியினுடையதுதான். கான் தோள் வளையைக் கண்டறியேன்; குண்டலங்களையும் கண்டிலேன். தினமும் அடிபணிவதனலே சிலம்பு ஒன்றே நான் கண்டது' என்று சொன்னன். இப்படி வால்மீகி முனிவர் சொல்கிருர்,

இலக்குவன் சீதையைத் தாய்போல வழிபட்டாலும் அவளைக் கண் எடுத்துப் பார்த்ததில்லை. அவள் திருமேனி எழிலேயோ அதில் அணிந்திருந்த அணிகலன்களையோ அவன் கண்டதில்லை. திருவடி ஒன்றையே கோக்கிப் பணிந்தவன். ஆதலின் அவள் காந்சிலம்பை மட்டுமே அடையாளம் கண்டு. கொண்டான்:

பிறன்மனை நோக்காத

பேராண்மை சான்ருேர்க்கு அறளுென்ருே? ஆன்றஒழுக்கு. "

1. குறள், 148

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/149&oldid=523351" இலிருந்து மீள்விக்கப்பட்டது