குகன் பண்பு 143
அந்த எழில் திருமேனியே அவன் அகக்கண்முன்
வின்றது. அதனல், 'அல்கலயாண்டு அமைந்த மேனி அழகன்' என்று வாய்கிரம்பக் கூறி மகிழ்ந்தான். கண்ணே அகலத் திறந்து இராமனே ஆழ நோக்கிய குகன், பிராட்டியைக் கண்கொண்டு கோக்கவில்லை. உடம்புடன் நிழல் வருவதுபோலப்பிராட்டி வருவதை அறிந்தானே யன்றி அப்பெருமாட்டியின் திருவுரு வைக் கண்டான் இல்லை. பிறன் மனே நோக்காத பேராண்மை உடையவன் அவன். தான் நன்கு கண்ட அழகன ஐந்து சொற்களால் வாய் இனிக்கக் கூறிய அவன். தான் காணுத பெருமாட்டியை அவள் என்ற அளவிலே சுட்டினன். இது அவனுடைய அரிய பண் பைக் காட்டுகிறது. இலக்குவன் பிறன்மனே கோக்காத பேராண்மை சான்றவன் என்பதை வால்மீகி ஒரு வகையில் அமைத்துக் காட்டினர். குகனுக்கும் அத் தகுதி உண்டென்பதை கம்பன் இத்தனை நுட்பமாக இங்கே வைத்துக் காட்டினன்.
அல்லை ஆண்டு அமைந்த மேனி
அழகனும் அவளும் துஞ்ச, வில்லை ஊன் றியகை யோடும்
வெய்துயிர்ப் போடும் வீரன் கல்லை.ஆண்டு உயர்ந்த தோளாய்
கண்கள்.நீர் சொரியக் கங்குல் எல்லைகாண் பளவும் கின்ருன்;
இமைப்பிலன் கயனம் என்ருன். ' (அல்லே - இரவை. துஞ்ச - உறங்க. வெய்துயிர்ப்பு -
பெருமூச்சு. வீரன் - இலக்குவன். தோளாய் - பரதனே. கங்குல் எல்லே காண்பளவும் - விடியும் மட்டும்.)
1. குகப்படலம் 42