பக்கம்:அழியா அழகு.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குகன் பண்பு 149

அகனமர் காதல் ஐயா!

கின்னெடும் எழுவர் ஆளுேம்,

புகலரும் கானம் தந்து

புதல்வரால் பொலிந்தான் உங்தை."

(குன்று சூழ்வான் - மேருமலையை வலம் வரும் கதிர வன்; அவன் மகன், சுக்கிரீவன். அகன் அமர். புகல் அரும் - புகுவதற்கு அரிய, உங்தை - உன் தங்தையாகிய தசரதன்.)

புதிய தம்பியரில் முதல்வகை கின்றவன் குகன். ஆதலின் அவனே முதலில் சொல்லி விபீடணனை ஏற்றுக் கொண்டான் இராகவன்.

இராமன், இராவணனே வீட்டி அயோத்திக்குப் புறப் பட்டான். கணக்கில்லாத வானரப்படைகள் அவனுடன் வந்தன. இடையிலே பரத்துவாசனுடைய ஆசிரமத்தில் தங்கினன் இராமன். அ போது அவன் அநுமனே கோக்கி "என் வருகையை நீ போய்ப் பரதனிடம் சொல்வாயாக' என்று சொல்லியனுப்பினன். அவ்வாறே புறப்பட்ட அநுமன் கங்கைக் கரையில் இருந்த குகனுக்கும் இராமன் வருகையைச் சொல்லிவிட்டுச் சென்றன்.

அந்த மகிழ்ச்சிக்குரிய செய்தியைக் கேட்டுப் பேரு வகை கொண்டு, தன் உடனுறையும் துணைவர்களுடன் குகன் பரத்துவாசர் ஆசிரமத்துக்கே வந்து விட்டான்.

இராமனேக் கண்டபோது அவனுடைய உணர்ச்சி கரைகடந்து பொங்கியது. நெடுந்துாரத்தில் வரும்போதே கையைக் குவித்துத் தொழுதனன். அவன் உள்ளம் கடுங்

1. வீடணன் அடைக்கலம். 146

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/157&oldid=523359" இலிருந்து மீள்விக்கப்பட்டது