பக்கம்:அழியா அழகு.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 அழியா அழகு

கியது, கண் துளங்கியது. ஒடினன். அழுதான். இராமன் காலில் விழுந்தான். இராமன் தம்பியைத் தழுவுவது போல அவனே எடுத்துத் தழுவிக்கொண்டான். "உன் மனைவி மக்கள் செளக்கியமா?' என்று விசாரித்தான்.

தொழுதனள்; மனமும் கண்ணும் துளங்கினன் சூழ ஓடி அழுதனன், கமலம் அன்ன

அடித்தல மதனின் வீழ்ந்தான்; தழுவினன் எடுத்து மார்பில்

தம்பியைத் தழுவு மாபோல்: 'வழுவிலா வலிய ரன்ருே

மக்களும் மனையும்?' என்ருன் : [துளங்கினன் - நடுங்கினன். தழுவுமாபோல்-எடுத்துத் தழுவினன். வழு இலா - கோய் இல்லாத.)

குகன் இராமனே நெடுநாள் காணுமல் தவித்துப் போனவன். அந்த நீண்ட பிரிவுக்குப் பிறகு இப்போது பார்த்தான். அவன் உள்ளத்தில் பொங்கிய உணர்ச்சி வேகத்தைச் சிறு சிறு வாக்கியங்களால் கம்பன் காட்டு. கிருன் தொழுது, தளங்கி, அழுது, விழ்ந்தான் என்று வினேயெச்சங்களே அடுக்கி அவன் செயல்களைத் தெரிவித் திருக்கலாம். அப்படிச் சொல்வதில் வேகம் தோன்ருது . தொழுதனன், அழுதனன், வீழ்ந்தான் என்று அவற்றை முற்ருக்கி வாக்கியங்களே முடித்து அமைத்ததனால் குகனு டைய செயல்களில் உள்ள வேகமும் அவற்றுக்குக் காரண மான உணர்ச்சியும் புலகிைன்றன.

முதலில் இராமன் அவன. "நீ என் தம்பி’ என்று சொல்லி அன்பு செய்தான். இப்போதோ அவனைத் தன்

芷。1É二余立。莒五3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/158&oldid=523360" இலிருந்து மீள்விக்கப்பட்டது