உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அழியா அழகு.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அழியா அழகு


இந்த கிலக்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று, காண்பார் கண்ணுக்கு ஆற்றல் குறைவாக இருப் பது; மற்ருென்று, காணப்படும் பொருளுக்குக் கண்டு முடிவடையும் எல்லே இல்லாமல் இருப்பது. அவர்கள் கண்ணக் குற்றம் சொல்ல முடியுமா? அவர்கள் வாள் கொண்ட கண்ணுர்'; கூரிய பார்வையை உடையவர்கள். எந்தப் பொருளேயும் தெள்ளத் தெளியக் கூர்ந்து காணும் கண்கள் அவை. அவற்றைப் பெற்றிருந்தும் அவர்களால் இராமன் வடிவு முழுவதையும் காண முடியவில்லை.

வாள் கொண்ட கண்ணுர் யாரே

வடிவினை முடியக் கண்டார்?

என்ற கேள்வியிலேயே அவர்கள் கண்ணுக்குக் குறை ஏதும் இல்லே என்ற கருத்தை வைத்திருக்கிருன் கவிஞன். இராமன் வடிவங்தான் காணும் அளவுக்கு மேற்பட்டதாக இருக்கிறது.

இந்த கிலேயில் இராமனேக் கண்ட மகளிருக்கு ஒர் உவமை கூறுகிருன் கவிஞன்.

ஊழ்கொண்ட சமயத்து அன்னன்

உருவுகண் டாரை ஒத்தார்.

"முறையாக அமைந்த சமயங்களில் அன்னவனுடைய சொரூபதரிசனத்தைக் கண்ட அன்பர்களே ஒத்தனர்' என்று அவன் சொல்லும்போது, அவர்களைச் சிறப்பிக் கின்ருன, குறை கூறுகிருன? குறை கூறியதாகவே கருதுவர் பெரும்பாலோர், -

"வாள்கொண்ட கண்ணுர் யாரே வடிவினே முடியக் கண்டார்?' என்று சிறுத்தி யிருந்தால் குறையாகக் கொள்ள இடமுண்டு. பின்னல் சொன்ன உவம்ை குறையாகக் கருதவில்லை என்பதையே காட்டுகின்றது. இதைச் சற்றுக் கவனிக்கலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/16&oldid=1671819" இலிருந்து மீள்விக்கப்பட்டது