பக்கம்:அழியா அழகு.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 அழியா அழகு

" அருள் உனது உளது காயேற்கு:

அவர்ளலாம் அரிய வாய

பொருள் அலர்: கின்னே நீங்காப்

புணர்ப்பினல் தொடர்ந்து போந்து

தெருள்தரும் இளைய வீரன்

செய்வன செய்க லாதேன்

மருள்தரும் மனத்தி னேனுக்கு

இனிதன்ருே வாழ்வு மன்ளுே'

(உனது அருள் உளது. புணர்ப்பினல் - பேற்றினால், இளேய வீரன் - இலக்குவன். தெருள் - தெளிவு. மருள் - மயக்கம். இனிதன்ருே வாழ்வு என்றது இனிதன்று என்ற பொருளேத் தருவது.)

அப்படிச் சொன்ன குகனேப் பார்த்து இராமன். "இப்படி என் பேசுகிருய்? பரதனே விட நீ வேரு? போய் இனிதே இருப்பாயாக’ என்று கூறினன். பரதனும் தன்சீனப் பிரிந்திருந்தான் என்ற கருத்தை எண்ணியே இராமன் கூறினன் பின்பு இராமன் அருகில் இருந்த சுக்கிரீவன் முதலியவர்களுக்குக் குகனே அறிமுகப் படுத்தினன்.

"இவன் கங்கையின் இருகரைக்கும் தலைவன். உயிர் தளிடம் தாயை விட அன்புடையவன். குற்றம் இல்லாத வேடர் தலைவன், குகன் என்னும் வள்ளல்" என்று கூறினன். -

தொழுதுகின் றவனை கோக்கித்

துணைவர்கள் தமையும் கோக்கி முழுதுணர் கேள்வி மேலோன்

மொழிகுவான்; 'முழுநீர்க் கங்கை

1, மீட்சிப், 314

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/160&oldid=523362" இலிருந்து மீள்விக்கப்பட்டது