பக்கம்:அழியா அழகு.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரதனும் குகனும் 159

தான். பரதனுடைய அடியில் வீழ்ச்தான். தகவுடையோர் சிந்தையினும் சென்னியினும் வீற்றிருக்கும் சீர்த்தியான் - பரதன். தந்தையினும் களிகூரத் தழுவினன் . தங்தை யைக் காட்டிலும் களிமிகத் தழுவிக்கொண்டான்.

இப்படிக் கூறினல் அடுத்த பாட்டில், தழுவின .புளினர் வேந்தன்' என்று வருவது மாறுபடாதோ என்ருல், அங்கே, தழுவப்பட்ட வேடர் தலைவன்’ என்று பொருள் கொள்ள வேண்டும், செயப்பாட்டு வினை தமிழில் மிகுதி .யாக வருவதில்லே. -

இந்த இருவகைப் பொருளிலும் வணங்கினன் என்ப தற்கு உரை வேறுபடுகிறது. இருவரும் அடிபணியும் வகைக்கு, வணங்கிளுன் என்பதற்கு அடி வீழ்க்தான் என்று உரைககவேண்டும். மற்ருெரு வகைக்கு தலைவளைக் தான் என்று கொள்ளவேண்டும். தொழுதான், வணங் .கின்ை, அடி வீழ்ந்தான என்ற மூன்றும் முறையே கை, தலை, மெய் என்ற மூன்றின் செயல்களையும் தனித் தனியே குறிப்பன. அடி வீழ்வதைத் தெளிவாகக் குறிப்பது கம்பன் வழக்கம். ஆதலால் இங்கே வணங்கினன் என்பதற்கு அடி வீழ்ந்தான் என்று கொள்வது சரியன்று' என்பது ஒரு

வாதம். - - -

சொற்பொருள் ஆராய்ச்சியை விட்டுவிட்டு. இந்த கிகழ்ச்சியின் தகுதியைப்பற்றி இரு வகையிலும் ஆராய்வார் இருக்கின்றனர். சக்கரவர்த்தியின் திருமகளுகிய பரதன் வேடன் காலில் விழுவது முறையன்று என்று கூறுவர் ஒரு -சாரார். பரதன் குகனத் தனக்கு மூத்தவன் என்று கூறிக் கொள்வதலுைம் திருமால் அடியார்களாகிய பாக வகர்களில் ஒருவரை ஒருவர் அடிபணிதல் முறை யாத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/167&oldid=523369" இலிருந்து மீள்விக்கப்பட்டது