பக்கம்:அழியா அழகு.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 அழியா அழகு

லாலும் அது இழுக்காகாது என்று அதற்குச் சமாதானம் கூறுவர் மற்றையோர். .

2

பரதனக் குகன் மாத்திரம் அடிவீழ்ந்து பணிந்தான். இருவரும் ஒருவர் தாளில் மற்றவர் வீழ்ந்தனர் என்ற இரண்டு செய்திகளில் எது கொள்வதற்குரியது? பாகவத. சம்பிரதாயம் இருப்பினும் கம்பன் சம்பிரதாயம் என்ன என்று தெரிந்துகொள்வது நல்லது அல்லவா? இத்தகைய சந்தர்ப்பங்களில், அதாவது மதிப்பிற்குரிய இருவர் சக்திக் கும் சமயங்களில், அவர்கள் தமக்குள்ளே வணங்கிக் கொள்வதைக் கம்பன் எப்படி எப்படிக் காட்டுகிருன் என்பதைக் கவனித்தால், அவன் கருத்துக்கு ஏற்றபடி இங்கே பொருள் கொள்ள முடியலாம்.

முதல் எடுத்துக்காட்டு

தசரதன் புதல்வரை அளிக்கும் வேள்வி புரியக் கலைக்கோட்டு முனிவனே அழைத்துவரச் செல்கின்ருன். அம்முனிவன் தன் மாமனராகிய உரோமபதன் என்னும் அரசனிடம் இருப்பதாக அறிந்து அவ்வரசனே நாடிச் செல்கிருன், தசரதன் வணங்கிப் பயன் பெறுவதற்குரிய முனிவனுடைய மாமனர் உரோமபதன் ஆயினும் தசரதன் சக்கரவர்த்தி.

தசரதன் வருவதை அறிந்து உரோமபதன் அவனே எதிர்சென்று வரவேற்கச் செல்கிருன். இருவரும் சக்திக், கிருர்கள். அப்போது உரோமபதன் தசரதன் அடியில் வீழ்கிருன். அவனைத் தசரதன் தழுவிக் கொள்கிருன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/168&oldid=523370" இலிருந்து மீள்விக்கப்பட்டது