உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அழியா அழகு.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விதியின் பிழை

பெருங்காப்பியமாகிய இராமாயணத்தின் கதை. பெரிது. அதில் வரும் பாத்திரங்களும் விகழ்ச்சிகளும் பல. யுத்த காண்டத்தில் நிகழும் இராவணன் வதைக் யோடு கதை முடிகிறது. பாலகாண்டம் முதல் யுத்த காண்டம் இறுதியாகக் கதையில் வரும் நிகழ்ச்சிகள் ஒன்றன்பின் ஒன்ருகச் சங்கிலி கோத்தாற்போல வருகின்றன. கதாபாத்திரங்களின் சொல்லும் செயலுமாக கிகழ்ச்சிகள் உருவாகின்றன.

இத்தனே பாத்திரங்களையும் இயக்கும் மூல ஆற்ற லாக ஒன்று இருக்கிறது. அந்த ஆற்றலேயே விதி என்று சொல்லுகிருேம். அது காரணமின்றித் திடீரென்று குதித்து இது இப்படித்தான் நிகழ வேண்டும்’ என்று காட்டு வதில்லே. நிகழ்ச்சிகளின் போக்கிலே ஒரு செயல் மற். ருென்றுக்குக் காரணமாக கிற்க, வித்தும் மரமும் ஒன்றை யொன்று தொடர்ந்து வருவது போலச் செயல்கள் நிகழ் கின்றன. இந்த நிகழ்ச்சிகளின் ஒழுங்குக்குக் காரணமாக நிற்பதுவே விதி. -

குறிப்பிட்ட ஒரு கிலேயில், நம்முடைய அறிவைக் கொண்டு பார்த்தால் இருவேறு விதமாகவோ பல வகை. யாகவோ விகழ்வதற்கு வாய்ப்பு இருந்தும், ஏதோ ஒரு வகையாகவே அது கிகழ்ந்துவிடுகிறது. அது மேலும் மேலும் பல விளைவுகளுக்குக் காரணமாகிறது. அந்த நிகழ்ச்சியை முன் சின்று விகழ்த்துவதே விதி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/179&oldid=523381" இலிருந்து மீள்விக்கப்பட்டது