பக்கம்:அழியா அழகு.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 அழியா அழகு

கம்பன் தான் இயற்றிய இராமாயணத்தில் இந்த விதியைப் பல இடங்களில் கினைப்பூட்டிக்கொண்டே போகிருன் கவியின் கூற்ருகச் சில இடங்களிலும் பாத்திரங் களின் கூற்ருகப் பல இடங்களிலும் சொல்லிக் காட்டு கிருன். இவ்வாறு விதி அமைக்கும் நிகழ்ச்சிச் சங்கிலியை ஒருவாறு இங்கே பார்க்கலாம். -

岑 ※ 崇

இராமனுக்கு முடிசூட்டுவதற்காகத் தசரதன் ஆவன செய்தான். அயோத்திமா நகரில் உள்ள மக்கள் யாவரும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்தனர். நகர் முழுவதையும் அழகு செய்தனர். அந்த அலங்காரங்களோடு விளங்கிய அக் ககரம் மண்ணின்மேல் இருக்கும் ஊராகத் தோன்ற வில்லே, வானவர் வாழும் அமராவதியே இங்கே வந்து விட்டது போன்ற தோற்றத்தோடு கின்றது. அது.

தசரதன். தன் அருமை மகனுக்கு முடிசூட்டித் தான் தவவாழ்வை மேற்கொள்ள வேண்டுமென்று நிமிர்ந்து கின்ருன். குடிமக்கள் யாவரும், குணங்களால் நிறைந்த நம்பியாகிய இராமன் கோமுடி சூடப்போகிருன் என்ற உவகையால் கிமிர்ந்து சிற்கின்றனர். இந்த கிலேயில் ஒருத்தி மட்டும் கிமிர்ந்து கடக்கவில்லை. அவள் வளைந்து கடந்தாள். அவள் கூனி; கிமிர்ந்து நடக்க இயலாதவள். அவள் உடம்பு மாத்திரமா கூனையுடையது? அவள் உள்ளமும் வளைந்து கூனியது.

துன்னருங் கொடுமனக் கூனி "

என்று கம்பன் அவளை அறிமுகப்படுத்துகிருன். அவ :ளுடைய மனமும் வளைந்தது; கொடுமை என்பதற்கு

1. மந்திரை சூழ்சல், 35.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/180&oldid=523382" இலிருந்து மீள்விக்கப்பட்டது