பக்கம்:அழியா அழகு.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விதியின் பிழை 1733.

வளைவு என்றும் ஒரு பொருள் உண்டு. உடம்பு வளைந்திருந்: தாலும் உள்ளம் வளையாத கூனியாக அவள் இருந்திருக்க லாம். ஆனல் இங்கே விதி, அவளே மனமும் கூனியாகச் செய்து விட்டது.

விதி, காரணமின்றிச் செய்யாது. அவள் உள்ளம் கூனியதற்குக் காரணம் உண்டு. இராமன் இளம்பருவ விளையாட்டைப் பற்ருகக் கொண்டு, விதி அந்தக் கார ணத்தை உண்டாக்கியது. குழந்தை இராமன் தன் வில்லில் உண்டையை வைத்து விளையாட்டாக யார் மேலேனும் எய்" வான். பிறருடைய முதுகில் மொத்தென்று அந்த மண்ணுண்டை விழும்போது அவனும் சிரிப்பான்; பட்டவர் களும் சிரிப்பார்கள்.

இராமன் பெரும்பாலும் கைகேயியினிடமே வளர்ந்தான்.. அந்தப் பெருமாட்டியும் அவனேயே தன் மகனக எண்ணிப் பேரன்பு செய்து வளர்த்தாள். ஆதலின் அவளுடைய தோழியாகிய மந்தரையை அடிக்கடி காணும் வாய்ப்பு: இராமனுக்கு இருந்தது. அவனுடைய விளையாட்டுக்கு அவளும் இலக்கானள். இல்லை, அவள் முதுகுக் கூன் இலக்காயிற்று. அவன் உண்டையை அக் கூன்மேல் அடித் தான். அவன் வில்லிலிருந்து வீசிய உண்டையே பின்பு. இராவணனைக் கொல்லும் அம்பை எய்வதற்குக் காரண மாகும் என்பதை அவன் அப்போது அறிந்தானே இல்லையோ!

எத்தனையோ பேர் இராமன் விளையாட்டை மகிழ்ச்சி யோடு ஏற்ருர்கள். ஆனல் கூனி அவ்வாறு ஏற்கவில்லை. அவளுக்கு உண்டையில்ை வலி மிகுதியாயிற்று என்று. சொல்ல இயலாது. உறுப்புக் குறையுடையவர்களிடம் அக்குறையைச் சுட்டிப் பேசினல் அளவற்ற சினம் உண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/181&oldid=523383" இலிருந்து மீள்விக்கப்பட்டது