பக்கம்:அழியா அழகு.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 அழியா அழகு

தைக் காட்டுகிருள். மெல்ல மெல்லத் தன் கருத்தைச் சொல்கிருள். அப்போதும் கைகேயி அவள் கருத்தை ஏற்க வில்லை. தன் தோழி தனக்கு இனியதைச் சொல்லாமல் இப்படிச் சொல்வதற்குக் காரணம் விதி என்பதை அவள் உணர்கிருள்.

"என்ன உளறுகிருய்? யாருக்கும் கல்லதை நீ சொல்ல. வில்லை. இது உனக்கே நல்லதன்று. நீ உன் இயல்பான அறிவோடு இதைச் சொல்கிருய் என்று நான் நினைக்க வில்லை. ஊழ்வினை உன்னேத் தூண்டுகிறது. அதனுல்தான் உன் மனம் போனபடி மனத்துக்கு கல்லனவென்று தோன்றி யவற்றை யெல்லாம் சொல்லுகிருய்" என்று சினத்தோடு பேசுகிருள் கைகேயி.

" உனக்கு கல்லையும் அல்ல. வந்து

ஊழ்வினை தூண்ட மனக்கு கல்லன சொல்லினை;

மதியிலா மனத்தோய், ! (மனக்கு - மனத்துக்கு.) - மந்தரை அப்போதும் தன் உரையை நிறுத்தவில்லை. கெஞ்சியும், மிஞ்சியும், சினந்தும், இரங்கியும் பேசுகிருள். கைகேயியின் இயல்பறிந்து பழகியவளாதலின், எப்படிச் சொன்னல் அவள் உள்ளம் கொள்ளும் என்று சிந்தித்து மெல்ல மெல்லத் தன் கருத்தைப் புகுத்துகிருள்.

கைகேயி இராமனிடம் இணயில்லாத அன்பு பூண்ட வள். இராமனுக்கும் அவளிடம் அன்பு மிகுதியாக இருந்தது. தாயன்பு எல்லாவற்றினும் வலியது. அன்றியும் கைகேயியோ தூயவள். அவள் சிந்தை தூயது; இராம. னிடம் ஆழ்ந்த அன்புடையது. அவள் தூய மொழியையே பேசுபவள்: மடமான் போன்ற மெல்லியல். .

1. மந்தரை சூழ்ச்சிப் படலம், 65.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/188&oldid=523390" இலிருந்து மீள்விக்கப்பட்டது