182 அழியா அழகு
இங்கே இராமயணக் கதையை கடத்தும் விதி யாருடை. யது? விதியினல் விளையப்போகிற கலமும் தீங்கும் யாரைச் சார்கின்றனவோ அவருடைய விதியென்று சொல்லலாம். இராவணன், தான் செய்த தீமையினால் அழியப் போகிருன். அவனது விதி என்று சொல்வதுதான் பொருத்தம். அவனுக்கு மாத்திரம் அழிவு வருகிறதா? அவளுேடு சேர்ந்த, அரக்கர் குலம் அத்தனேக்கும் அழிவு வருகிறது. ஆகவே அந்த விதி, அரக்கருடைய தலைவிதி என்றே சொல்ல. லாம்.
விதியின் விளைவுக்கு இரு புறம் உண்டு. வயலில் களே எடுக்கிருர்கள்; களேயாக முளைத்த செடிக்குத் திங்கு கேர்கிறது; ஆனால் அதே சமயத்தில் பயிராக விளங்த செடிக்கு கன்மை உண்டாகிறது. அவ்வாறே இராவணன் தீமை விளேத்ததனால் துன்புற்ற தேவரும் முனிவரும் இராவண வதத்தால் நலம் பெறுகிருர்கள். அரக்கருக்குத் தீங்கும் அல்லவருக்கு கலமும் விளேகின்றன. இந்த விளைவுக்குக் காரணம் இராவணனும் பிற அரக்கரும் செய்த தீமை மட்டும் அன்று; அவர்களால் அல்லலுற்ற, தேவர் முதலியோர் செய்த நன்மையும் காரணமாகும். அரக்கர் பாவம், அல்லவர் இயற்றிய அறம் ஆகிய இரண் டையுமே பற்றுக்கோடாகக் கொண்டு விதி கதையை கடத்துகிறது.
ஆதலின் கைகேயி மனம் திறம்ப, மெல்லியலாகிய அவள் உள்ளம் சிறிதும் இரக்கமின்றிக் கடுமையைப் பெற்றதாகிய செயலுக்கு விதி காரணமானுலும், அந்த விதி: செயலாற்ற இரண்டு பற்றுக் கோடுகளைக் கொண்டிருக் கிறது. அவை அரக்கர் பாவமும், அல்லவர் இயற்றிய புண்ணியமுமே யாகும்.
கைகேயியின் உள்ளத்தில் இயல்பாக இருந்த அருளே அவள் துறந்தாள். அவள் இயல்பாகத் துறக்க