பக்கம்:அழியா அழகு.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 அழியா அழகு

இறுதியில் இராவணன் இறந்து கிடக்கும்போது: மண்டோதரி வந்து புலம்புகிருள். அவள் அறிவுடை யவள். அவள் இவ்வளவு காலமாக நிகழ்ந்த நிகழ்ச்சி களுக்கு மூலகாரணம் விதியென்பதை நன்கு. உணர்ந்தவள். விதியின் ஒரு வேர் அரக்கர் பாவம்: அதில் தலைமையானது இராவணன் இழைத்த தீமை. அது யாருக் கும் தெரியும். கண்முன் தெரியாத மற்ருெரு வேர் அமரர் கல்வினை; அறிவுடையவளாகிய மண்டோதரி அதை கினேக் கிருள். அமரர் கல்வினையில் தலைமையானது இந்திரன் தவம். விதியின் ஒரு வேராகிய அதுவே இவ்வளவு நிகழ்ச்சி களுக்கும் தாண்டுகோலாக இருப்பது என்று அவள் சொல் கிருள். X

சானகி அழகியாகப் பிறந்ததும், கற்புடையவ ளானதும், இராவணன் அவளேக் காமுற்றதும், சூர்ப்ப னகை மூக்கிழந்ததும், இராமன் காட்டுக்கு வந்ததும் ஆகிய எல்லாம் புரந்தரனர் தவம் விகளவதற்கு உறுதுணையாக கின்றன. இராவணன் தீமைக்கும் புரந்தரனர் தவத்துக்கும் உரிய விளைவு இட்போது விளைந்துவிட்டது. அவள் புலம்பு கிருள்,

காந்தையருக் கணியனைய சானகியார் . பேரழகும் அவர்தம் கற்பும்

ஏந்துபுயத் திராவணனர் காதலும் அச்

சூர்ப்பனகை இழந்த மூக்கும் வேந்தர்பிரான் தயரதளுர் பணியதல்ை வெங்கானில் விரதம் பூண்டு போர்ததுவும் கடைமுறையே புரந்தரஞர்

பெருந்தவமாய்ப் போயிற் றம்மா!' "

1. இராவணன் வதை. 241.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/194&oldid=523396" இலிருந்து மீள்விக்கப்பட்டது