பக்கம்:அழியா அழகு.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 அழியா அழகு

காட்டு வாழ்க்கையையுடைய பேதையாகிய குகனேக் கண்டு, "நீ என் தம்பி" என்று மனமார ஏற்றுக்கொண்ட செய்தி இராமனுடைய கருணைக்கு அடையாளம். இந்த அரிய பண்பைச் சீதை அசோகவனத்தில் தனியே இருக்கை யில் கினைந்து உருகுகிருள். . -

ஆழ நீர்க்கடல் அம்பி கடாவிய ஏழை வேடனுக் கெம்பிகின் தம்பிே தோழன் மங்கை கொழுந்தி எனச்சொன்ன வாழி கண்பினை உன்னி மயங்குவாள். I. ' திருமங்கையாழ்வாருடைய உள்ளம் கொள்ளே கொண்ட கலங்களுள் இந்தப் பண்பும் ஒன்று. ஆதலால், -

ஏழை ஏதலன் கீழ்மகன் என்னது

இரங்கி மற்றவர்க் கின்னருள் சுரந்து, மாழை மான்மட நோக்கிஉன் தோழி;

உம்பி எம்பிஎன் ருெழிந்தில; உகந்து, தோழன் நீளனக் கிங்கொழி என்ற

சொற்கள் வந்தடி யேன்மனத் திருந்திட ஆழி வண்ணகின் அடியிணை அடைந்தேன்;

அணிபொழில்திரு அரங்கத்தம் மானே' " என்று பாடி ஈடுபடுகிருச்.

"முன்பு காங்கள் நான்கு பேர் சகோதரர்கள்; இப் போது உன்னேடு ஐந்து பேர் ஆகிவிட்டோம்' என்று விளக்கமாகவே இராமன் அவனைத் தம்பியர் வரிசையில் வைத்துப் பேசுகிருன்.. -

1. arrio படலம், 23. அம்பி . ஒடம். கடாவிய - தள்ளிய. எம்பி - என் தம்பி. கொழுந்தி - அண்ணன் மனைவி.

2. பெரிய திருமொழி, 5. 8; 1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/198&oldid=523400" இலிருந்து மீள்விக்கப்பட்டது