பக்கம்:அழியா அழகு.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 அழியா அழகு

' கங்கை இரு கரையுடையான்;

கணக்கிறந்த காவாயான்;

உங்கள்குலத் தனிகாதற்

குயிர்த்துணைவன்; உயர்தோளான்;

வெங்கரியின் ஏறனையான்;

விற்பிடித்த வேலையினன்;

கொங்கலரும் கறுந்தண்டார்க்

குகன்என்னும் குறியுடையான்." 1

சுமந்திரன் மதியமைச்சனதலின் அப்பொழுதைக்குக் குகளுல் ஆகும் காரியம் உண்டென்பதை உணர்த்துவதற். காக, எடுத்தவுடன் அவன் பெயரைக் கூடச் சொல்லாமல், "கங்கையின் இரு கரைக்கும் சொக்தக்காரன்; கணக்கில்லாத ஒடத்தை உடையவன்' என்று சொல்லுகிருன். அத்தனை பேரும் கங்கையைத் தாண்டவேண்டும் அல்லவா? பரதனே. எப்போது இராமனேக் காண்போம் என்று துடித்துக் கொண்டிருக்கிருன்; அவன் எண்ணமெல்லாம் இராமனிடத் திலே இருக்கிறது. மண்ணிலே காந்தத்தைச் செருகினல் அது இரும்புப் பொடியை மாத்திரம் இழுக்கும். அது போலக் குகனுடைய இயல்புகளைச் சுமந்திான் சொன்ன போது, அவன் கங்கைக் கரைக்குரியவன், ஒடக்காரன் என்பவற்றைப் பரதன் காது வாங்கிக்கொள்ளவில்லை. "'உங்கள் குலத் தனிநாதற் குயிர்த்துணைவன்' என்று சொன்னதை மாத்திரம் பற்றிக்கொண்டது. உடனே, 'அப்படியா? இராமனுக்கு உரிய துணேவன? அப்படியானல் அவன் எனக்குத் தமையனே! நானே போய் அவனே ப் பார்ப்பேன்" என்று சொல்லி எழுந்து விட்டான். .

1. குகப். 25. கசவாய் - ஒடம். விற்பீடித்த வேக யினன் -- வில்கலப்பீடித்த ஏவலர் கூட்டமாகிய சமுத்திரத்தையுடையவன் கொங்கு - வாசனை. குறி - பெயர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/200&oldid=523402" இலிருந்து மீள்விக்கப்பட்டது