பக்கம்:அழியா அழகு.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரே கினைப்பு 193

தன்முன்னே அவன்தன்மை

தன்துணைவன் முந்துரைத்த சொன்முன்னே உவக்கின்ற

துரிசிலாத் திருமணத்தான், " மன்முன்னே தழீஇக்கொண்ட

மனக்கினிய துணைவனேல் என்முன்னே; அவற்காண்பேன்

யானேசென்று' எனஎழுந்தான். ' பரதன் இராமனுடைய தம்பி, துரிசு இல்லாத மனத்தை உடையவன். இராமன், குகனைத் தம்பி என்று சொன்னதைக் கேளாதவன். அவன் குகனிடம் இராமனுக்கு அன்பு உண்டு என்பதை உணர்ந்த அளவில் அவன் உணர்ச்சி விஞ்சி, 'அவன் என் தமையன்தான்' என்று சொல்கிருன். மூலநாயகன் பேசிய குரலோடு ஒத்த சுருதியில் இவன் குரலும் அமைகிறது.

பின்பு இருவரும் சக்தித்து அளவளாவுகிருர்கள். பரதன் தன்னுடன் வந்த தாய்மார்களைக் குகனுக்கு அறிமுகம் செய்து வைக்கிருன். முதலில் கோசலையைக் காட்டி அவள் பெருமையைக் கூறுகிருன்.

அதைக் கேட்டவுடன் குகன் அப் பெருமாட்டியின் திருவடிகளில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து அழுகிருன். அப்போது அவள் பரதனே கோக்கி, "இவன் யார்?' என்று கேட்கப் பரதன் சொல்கிருன்: "இவன் இராகவனுக்குத் து ன வ ன், லட்சுமணனுக்கும் சத்துருக்கனனுக்கும் எனக்கும் மூத்த தமையன்; குகன் என்பது இவன் பேர்' என்று அறிமுகம் செய்து வைக்கிருன்,

1. குகப்படலம், 27. அவன் தன்மை-குகனுடைய இயல்புகளே. துணைவன்.சுமந்திரன். துரிசு - குற்றம். மன். அரசனகிய இராமன், மனக்கு இனிய - திருவுள்ளத்துக்கு உவப்பசன. முன்னே-தமையன் தான்

a—13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/201&oldid=523403" இலிருந்து மீள்விக்கப்பட்டது