194 அழியா அழகு
என்றலுமே அடியின்மிசை கெடிதுவிழ்க் தழுவான, "இவன்யார்?' என்று கன்றுபிரி காராவின் துயருடைய
கொடிவினவக் கழற்கால் மைந்தன், "இன்றுணைவன் இராகவனுக்கு இலக்குவற்கும்
இளையவற்கும் எனக்கும் முத்தான்; குன்றனய திருநெடுந்தோட் குகன்என்பான்.
இங்கின்ற குரிசில்” என்ருன். ' சுமந்திரனிடம். 'என் முன்னே' என்று சொன்னதை ரி த்துச் சொல்பவனைப் போல இங்கே பேசுகிருன். இராமனேப் பெற்ற திருவயிறுடையாளிடமே, "இவன் இராமனுக்குத் தம்பி" என்றும், "மற்றச் சகோதரர்களுக்கு அண்ணன்' என்றும் சொல்லி அக் கருத்துக்கு அரண் செய் கிருன். -
இராமன், குகனேத் தம்பி என்ருன். அவன் கூறியதை அவன் தம்பியர் ஏற் றுக்கொண்டால் அல்லவா அச்சொல் பொருளுடையதாகும்? இராமனுடன் இருந்த லட்சுமணன் அதனை ஏற்றுக்கொண்டான் என்பதைச் சொல்லவேண்டிய தில்லை. இங்கே பரதனும் ஏற்றுக்கொண்டான்; சத்துகுக்கன லுடைய பிரதிநிதியாகவும் இருந்து, "இளையவற்கும் எனக்கும் மூத்தான்' என்று சொல்லிவிட்டான். குகன் பெற்ற உரிமையை இந்த வாசகங்கள் வலியுறுத்துகின்றன. இதோடு சின்றதா?
கோசலை தன் காலில் விழுந்த குகனப் பார்க்கிருள். 'இவனையா இராமன் தம்பி என்ருன்? இந்த அசடன் பரதனும் அண்ணன் என்கிருனே!' என்று எண்ணும் தாய் அல்ல அவள். இராமன் பிறந்த திருக்கோயில் ஆதலின்
1. குகப். 66. கொடி. கோசலை. இளையவற்கும் - சத்துருக்கன அக்கும்.