196 அழியா அழகு
அலைகிருன். இராவணனது மாளிகையிற் புகுந்து பார்க் கிருன். ஒரு பெரிய கடல் கிடப்பதைப் போலத் துயில்: கின்ருன் இராவணன். அந்தக் காட்சியைப் பன்னிரண்டு பாட்டுக்களால் விரிவாகக் கம்பன் பாடுகிருன். பாட்டுப் பன்னிரண்டானலும் எல்லாம் ஒன்றையே குறிப்பன என்பதற்கு அடையாளமாகப் பதின்மூன்ருவது பாட்டில் தான் வாக்கியம் முடிவு பெறுகிறது. அவ்வளவு பாட்டால் பாடினுல்தான் அந்த இராட்சசக் காட்சியை உணர்ந்து கொள்ள முடியும் போலும்!
தன் உருவத்தை அநுமன் குறுக்கிக் கொண்டு, பேரு, ருவம் படைத்த இராவணன் முன் கின்று அவனுடைய பத்துத் தலைகளேயும் இருபது தோள்களேயும் பார்த்தான். அவனுடைய கண்ணிலே பிரளயகாலத் தி விண்டு எழுந்தது. 'இந்தக் கணத்தில் இங்கேயே இவனே எசுக்கி, விடுகிறேன்' என்று பல்லேக் கடித்து, இரண்டு கரங்களே யும் பிசைந்தகொண்டு எழுந்தான். அதற்குள் சற்றே யோசனை உண்டாயிற்று 'சே' என்ன காரியம் செய்யத் துணிந்தோம்! நமக்கு இராமன் இட்ட கட்டளே என்ன? இவனைக் கொல்லும்படி சொல்லவில்லையே! ஒரு காரியத் துக்காக வந்து மற்ருென்று செய்தல் அறிவுக்கு அழகன்று. அவசரப்பட்டு இதைச் செய்துவிட்டால் பிறகு இது பிழை. என்று உணர்ந்து வருந்த நேரும் என்று எண்ணிஞன். காலத்தை எதிர்பார்த்துக் கரையை மீருத கடலேப்போல அவன் அடங்கினன். பிறகு மற்ருென்றை எண்ணினன் . 'இன்று எனக்கு வந்த கோபம் என்ளுேடு கிற்கட்டும். இந்தப் பைத்தியக்காரக் கோபம் என்னேப் போன்றவர் யாருக்கும் வரவேண்டாம். "சீதாபிராட்டியைத் சிறையில் வைத்த கொடிய இராவணக்னக் கொன்அ போருக்கு. முற்றுப் புள்ளி வைத்துவிட்டது ஒரு குரங்கு: என்ற வார்த்தை எழுமானல் பெருவிரளுகிய இராமனுடைய