பக்கம்:அழியா அழகு.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 அழியா அழகு

அவன் அடியைப் பணிவேன். அதற்கு ஏற்ற காலம் இது. என் தோளில் ஏறிக்கொண்டால் எத்தகைய ஊறுபாடும் இல்லாமல் இராமனிடம் சேர்த்துவிடுவேன்' என்று, சீதையைப் பணிந்து விண்ணப்பித்துக் கொண்டான்.

அதைக் கேட்ட சீதை அதற்கு இணங்கவில்லை. "அப்பா, உன் ஆற்றலுக்கு ஏற்றபடியே நீ பேசுகிருய். ே சொன்னபடியே செய்து விடுவாய். அதில் ஐயம் இல்லே. ஆனல் என்னுடைய பெண்புத்திக்கு அது கியாயமன்று: என்று தோன்றுகிறது' என்று சொல்லிப் பல காரணங்களே எடுத்துரைத்தாள்.

'நீ எந்த வஞ்சனேயான எண்ணமும் உடையவன் அல்ல. என்னை மாற்ருன் எடுத்துச் சென்று சிறைவைக்க, அவனைத் தண்டித்து என்னே மீட்டுச் செல்வது இராமனு: டைய கடமை. அதனை அவன் செய்யாவிட்டால் அவனுடைய வில்லுக்கு இழுக்கு உண்டாகும்' என்பது ஒரு காரணம்.

" அன்றி யும்பிறி துள்ளதொன் ருரியன் வென்றி வெஞ்சிலை மாசுனும், !

இராமனுடைய வில்லுக்கு மாசு உண்டாகும் என்று முன்பு அநுமன் கினைத்ததையே இங்கே சீதை கூறுகிருள். பின்னும் அவள், "நான் கினைத்திருந்தால் இந்த இலங்கை மாத்திரமா, உலகங்கள் யாவற்றையும் என் சொல்லினல் சுட்டு விடுவேன். அப்படிச் செய்தால், இராமனுடைய வில்லின் ஆற்றலுக்கு மாசு உண்டாகும் என்ற நினைவால், அந்த எண்ணத்தை, தகாத பொருள் கையில் கிடைத்தால் உடனே வீசி எறிவதுபோலப் போக்கி விட்டேன்" என்கிருள்.

1. சூடாமணிப், 11.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/206&oldid=523408" இலிருந்து மீள்விக்கப்பட்டது