பக்கம்:அழியா அழகு.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரே நினைப்பு 199

" அல்லல் மாக்கள் இலங்கைய தாகுமோ?

எல்லை நீத்த உலகங்கள் யாவும்என் சொல்லி ஞல்சுடு வேன்; அது தூயவன் வில்லின் ஆற்றற்கு மாசென்று வீசினேன். 'இராமன் தன் மனைவியைத் தான் மீட்டுக் கொள்ள வகையின்றி, அ ங் த ப் பெண்ணே தன்னைச் சிறை வைத்தவனேக் கொன்ருள் என்று உலகம் கூறுமே என அஞ்சிள்ை பிராட்டி. அநுமன். இராவணனைக் கொல்ல எண்ணியபோது, அது தனக்குப் புகழாகும் என்று கினேக்காமல் இராமனுடைய வில்லுக்கு மாசாய் முடியும் என்று கினைக்கிற கினேப்பும், இங்கே சீதை கினேப்பதும் ஒரே சுருதியில் அமைகின்றன.

இந்தக் குரலே இராமனிடமே கேட்கும்படி ஒரு சந்தர்ப் பத்தை உண்டாக்குகிருன் கம்பன்.

இராவணனுக்கு கல்லுரை கூறியும் அவன் கேளாமையால் விபீடணன் அவனை விட்டு இராமனிடம் சரண் புகுந்தான். அவன் தன் மாற்ருனுக்குத் தம்பி யாயிற்றே என்று கருதாமல், அடைக்கலமென்று வந்தவனே அஞ்சலென்று காத்தல் அறமென்று எண்ணி ஏற்றுக் கொண்டான் இராமன்.

பிறகு இராவணனுடைய படைப்பலத்தையும் இலங்கை நகரின் அமைப்பையும் பற்றி இராமன் விபீடணனை வினவினன். அவன் அவற்றை விரிவாகச் சொன்னன். அதோடு அநுமன் இலங்கைக்கு வந்தபோது போர் செய்து அட்சகுமாரன், பஞ்ச சேனதிபதிகள் முதலியவர்களே வதைத்ததையும் இலங்கையை எரியூட்டிய தையும் சொல்லி வியந்து பாராட்டினன். அநுமன். தான்

z 3 1

1. சூடாமணிப், 18. அல்லல் இலங்கையது ஆகுமோ? தூயவன். இராமன், வீசினேன்.தழுவவிட்டேன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/207&oldid=523409" இலிருந்து மீள்விக்கப்பட்டது