பக்கம்:அழியா அழகு.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்த மாமணி

அநுமன் சீதாபிராட்டியைத் தேடி இலங்கை முழு. வதும் திரிந்து பார்க்கிருன்: புகைபுகா வாயிலிலும் புகுந்து ஆராய்கிருன். பிராட்டியை எங்கும் காணுமல் ஏங்குகிருன். கடைசியில் அசோகவனத்துக்கு வருகிருன்.

அரக்கியர் பலரினிடையில் சிதை சோகமே வடிவாக இருக்கிருள். இராமன் வருவான், வருவான் என்ற நம்பிக்கையோடு ஒவ்வொரு கணமும் அவனே எதிர்பார்த்துக் கொண்டு உயிரை வைத்திருக்கிருள். பல இடங்களிலும் அவளைத் தேடிக் காணுமல் சோர்ந்த உள்ளத்தோடு அசோக வனத்துக்கு வந்த அநுமன் அவளேக் காண்கிருன். அப் பிராட்டியை முன்பு கண்டறியாவிட்டாலும், அவளுடைய நிலையிலுைம் திருமேனியிலுைம் கருத்துக்கு வாயிலாகிய கண்களாலும் அவளே சிதையென்று தெளிந்து கொள் கிருன். பிறகு இராமன் திருகாமத்தைச் சொல்லிக்கொண்டு. அவளே அணுகுகிருன். அவள் முதலில் ஐயுற்ருலும் பின்பு மனம் தேறுகிருள். அநுமன், தான் இராகவன் தாதகை வந்த செய்தியைக் கூறி இராமனுடைய கிலேயை யும் கூறுகிருன் இராமனுடைய எழிலையும் அவன் கூறிய அடையாளங்களேயும் எடுத்துச் சொல்லி அப் பெருமா ணுடைய கணேயாழியைக் காட்டுகிருன், அதுகண்டு. உவகை மீதுார்ந்த பிராட்டி அவைேடு பல செய்திகளேச் சொல்லித் தன் சூடாமணியை அவன்பால் அளிக்கிருள்.

அப்பால் அதுமன் அரக்கரோடு போர் செய்து இலங்கையை எரித்துவிட்டு இராமனிடம் சென்று தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/210&oldid=523412" இலிருந்து மீள்விக்கப்பட்டது