பக்கம்:அழியா அழகு.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்த மாமணி 205,

கம்பன். சீதை என்று பெயர் சொல்லவில்லை; இராமனேச் சொல்லி அவனுக்கு ஏற்ற தேவி என்று சொல்கிருன். இராமனேச் சொல்லுகையில், உரு நிறத்து ஒரு தனிக் கொண்டல் என்றும், ஊழியான் என்றும் இரண்டு சிறப் புக்களால் சுட்டுகிருன். திருமேனியின் நிறத்தில்ை ஒப்பற்ற சிறப்பான மேகம் போல விளங்குகிறவன், நீடுழி காலம் வாழ்பவன் என்பது அந்த இரண்டுக்கும் பொருள். அந்தப் பெருமானுக்கும் சீதைக்கும் உள்ள தொடர்பு பின்பு வருகிறது.

உருநிறத் தொருதனிக்

கொண்டல், ஊழியான்

இருகிறத்து உற்றவெற்

கியைந்த காந்தத்தை,

'இராமனுடைய விசாலமான மார்பிலே பொருந்திய ஒளிக்குப் பொருத்தமான காந்தமணியை' என்று பொருள் கொள்ள வேண்டும். இராமனுடைய திருமேனி ஒளியைக் கண்டு தன் கண்களால் மொண்டு உண்ட அநுமன், அவனுடைய திருமார்பின் ஒளிக்கு ஏற்ற ஒளியும் சிறப்பு. முடைய காந்தமணியாக இருக்கும் சீதையைக் கண்டான்.

'இரு நிறத்து உற்ற எற்கு இயைந்த காந்தத்தை' என்று பிரித்துப் பொருள் கொள்ளும்போது இவ்வாறு கொள்வது ஒரு முறை ஆல்ை சீதையைக் கார்தம் என்று உருவகம் செய்வதற்குச் சிறப்பான பயன் ஒன்றும் இல்.ை மார்பின் மணி என்று சொல்லலாம். காந்தமணி என்று சொல்வதற்கு ஏற்றபடி அங்கே இரும்பாக எதையேனும் உருவகம் செய்திருந்தால் பொருத்தமாக இருக்கும், அப்படி. ஒன்றும் அங்கே இல்லே. இராமனுக்கு ஏற்றவள் சீதை என்பதையே இராமனது திருமார்புக்கு ஏற்ற மணி’ என்று சொன்னன் கவிஞன் என்று கூறி அமைந்து:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/213&oldid=523415" இலிருந்து மீள்விக்கப்பட்டது