பக்கம்:அழியா அழகு.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 அழியா அழகு

விடலாம். ஆனல் காந்தம் என்று சொன்னதில் ஏதோ ஒரு குறிப்பு இருக்கக்கூடும் என்ற கினேவு இடையிடையே தோன்றுவதை மாற்ற முடியாது.

அங்கே இரும்பைப் புகுத்துவதற்கு வழி உண்டா? இருந்தால் காந்தம் பொருந்திவிடும். இந்த எண்ணத் தோடு கடைசி அடிக்கு வேறு வகையில் பொருள் சொல் வதும் உண்டு. இரு நிறத்து உற்ற எற்கு இயைந்த காந்தத்தை - விசாலமான திருமார்பிலே பொருந்திய, அடி யேனுக்கு இசைந்த காந்தத்தை' என்று பொருள் கூறுவர் சிலர். இங்கே எற்கு என்னும் சொல்லுக்கு எனக்கு என்று பொருள் கொள்ளவேண்டும். இரு நிறத்து உற்ற காங்கம், எற்கு இயைந்த காந்தம் என்று இரண்டு பகுதியாக்கிப் பொருள் கொள்ளுகையில், இராமபிரானுடைய திருமார்பில் உற்ற திருமகளாகிய சீதையை, அடியேனுடைய உள்ள மாகிய இரும்பை இழுக்கும் காந்தம் போன்ற பிராட் டியை என்று வேண்டிய சொற்களைப் பெய்து கொள்ள வேண்டும். .

இந்தப் பாட்டு அநுமன் கூற்றன்று; கவிஞன் கூற்று. ஆகவே கவிஞன் தன் உள்ளத்தை இழுக்கும் காந்தமாகச் சீதையை இங்கே சொல்கிருன் என்று கொள்ள வேண்டும். கம்பன் இந்த இடத்தில் தனக்குப் பிராட்டி யினிடம் இருக்கும் பக்தியைக் காட்டவேண்டிய அவசியம் என்ன? வேறு எவ்வளவோ இடங்கள் இருக்க, அவற்றை விட்டு இந்த அவசரத்தில் சொல்வதற்கு கியாயம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. காந்தம் என்று சிதையைச் சொல்லிவிட்டபடியால், அதற்கு ஓர் இரும்பைக் கண்டு பிடிக்க வேண்டுமே என்ற எண்ணம் தோன்ற, கம்பனுக்குப் .பிராட்டியிடம் உள்ள ஈடுபாட்டை இங்கே திணிக்க வேண்டியிருக்கிறது. இப்படிப் பொருள் கொள்வதில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/214&oldid=523416" இலிருந்து மீள்விக்கப்பட்டது