பக்கம்:அழியா அழகு.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்த மாமணி 211

இடம் இது. அங்கேயோ காந்தம் இருக்கிறது. வேலும் இருந்தால் எவ்வளவு பொருத்தமாக இருக்கும்!

பாட்டைக் கூர்ந்து பார்த்தேன் ஆ! இதோ வேல் அகப்பட்டு விட்டது. ஆம், அந்தப் பாட்டுக்குள் அது புதையுண்டு குறுகி வடிவிழந்து கிற்கிறது.

இருநிறத் துற்றவெற்

கியைந்த காந்தத்தை

என்பதல்லவா இதுவரையில் பார்த்த பாடம்? உற்ற வெற்கு என்பதை உற்ற எற்கு' என்று பிரித்துக் தடுமாறிளுேம். உற்ற வெற்கு என்று பிரித்தால் பொருளில்லை என்பதல்ை எற்கு என்று பிரிக்கவேண்டி யிருந்தது. அதை வேற்கு என்று வைத்துப் பாருங்கள்: பாட்டு எவ்வளவு பொருத்தமாகப் பொருட் சிறப்புடன் அமைந்துவிடுகிறது!

இருநிறத்து உற்றவேற்கு

இயைந்த காந்தத்தை. "விரிந்த மார்பில் பதிந்த வேலுக்குப் பொருத்தமான காந்தத்தை' என்று பொருள்கொள்ளவேண்டும். பசிக்கு இயைந்த உணவு என்பதுபோல இங்கே, வேலை வாங்கு வதற்கு இசைந்த காந்த மாமணியை என்பது பொருள். எவ்வளவு பொருத்தமானது!

சீதையைப் பிரிந்த பிரிவில்ை துன்புறுகிருன் இராமன். அந்தப் பிரிவை அவன் உள்ளம் எண்ணி எண்ணி வாடு கிறது. பிரிவுத் துன்பமாகிய வேல் அவன் மார்பிலே பாய்ந்து பதிந்திருக்கிறது. அதை வாங்கக் காந்த மாமணி வேண்டும். அந்த மணி எங்கே இருக்கிறது என்று தேடினன் அநுமன். எங்கும் காணவில்லை. கடை சியில் அசோகவனத்தில் அரக்கியர் கூட்டத்திடையே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/219&oldid=523421" இலிருந்து மீள்விக்கப்பட்டது