பக்கம்:அழியா அழகு.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்டதும் காணுததும்

மன்மதன் ஒவியம் வரைய உட்கார்ந்தான். தன்னுர டைய தாயின் உருவத்தையே உயிரோவியமாக எழுத. வேண்டும் என்பது அவன் விருப்பம். மற்ற ஒவியர்கள் வைத்துக்கொள்ளும் வண்ணங்கள் இருந்தால் போதா என்று எண்ணி அமுதத்தையே வண்ணமாக்கினன், அப் போதுதானே ஒவியத்தில் உயிர்த்தன்மை சாரும்? கிண்ண மும் வண்ணமும் வைத்துக்கொண்டான். கையில் துாரிகையை எடுத்தான். ஒவியம் தீட்ட முயன்ருன். இதுவரையில் வண்ணமும் கிண்ணமும் இருந்தனவே. அன்றி, எண்ணம் சிறக்கவில்லை. இப்போதுதான் சற்றே, எண்ணினன்.

திருமகளுடைய குமாரளுகிய மாரனுக்கு இந்த ஆசை தோன்றியது வியப்பன்று. ஆனல் இப்போது அந்தத் திருமகளின் மூல ஓவியத்தைத் திட்ட முற்படவில்லை. அவள் சிதையாகப் பிறந்திருக்கிருள். சீதையின் திருவுருவத்தை. ஓவியம் ஆக்கவேண்டும் என்றே இன்று தொடங்கி யிருக்கிருன்.

எண்ணம் மதனன் உள்ளத்திலே சுழன்றது. முதலில் எண்ணத்தில் ஆழ்ந்து, உள்ளத்தில் உரு எழுதி, அப்பால் அதனேக் கிழியில் வடிப்பது கலைஞன் பண்பு. இங்கே. மதனனுக்கு ஆசை இருந்ததே ஒழிய ஆற்றல் இல்லை.

கருவிகளே வைத்துக்கொண்டு திட்டப் புறப்பட்டு விட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/222&oldid=523424" இலிருந்து மீள்விக்கப்பட்டது