உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அழியா அழகு.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 அழியா அழகு

முதலில் தொடங்கலாம் என்றே எண்ணினன். அவயவம் அமைக்கும் தன்மை யாது?’ என்று காடினன். அவன் நல்ல கலைஞன் அல்லன்; அவனுக்குச் சீதையின் ஒவியம் எழுதும் தகுதி இல்லை.

அதற்கு மற்ருெரு காரணமும் உண்டு. சீதைக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கன்னியாகவே இருக் கிருள். பிறர் நெஞ்சு புகாத இயல்பினள் அவள். திருமக ளாக இருக்கும்போது மதனன் அன்னே என்று உறவு கொண்டாடலாம். அந்த எண்ணத்தை மேற்கொண்டு தான் இந்தப் பைத்தியக்கார வேலையைத் தொடங்கியிருக் கிருன். இப்போது சீதையாக வந்திருக்கும் கன்னி எளிதிலே பிறர் உள்ளம் புகாதவள் என்பதை அவன் அறியான். அவள் இன்னும் இராமனுடைய உள்ளத்திலும் புகாத புது மலராக இருக்கிருள். இனிமேல்தான் இராமன் வரப் போகிருன். இந்த கிலேயில் வெளியே புறப்படாத அப் பெருமாட்டியின் பண்பை அறியாமல், கிலே அறியாமல், அவளே ஒவியமாகத் திட்ட வருமா?

முன்னல் வண்ணம் கிறைந்த கிண்ணங்கள்; அமுதத் கையே வண்ணமாக்கிக் குழைத்திருக்கிருன் கையிலே தூரிகை, எதிரே கிழி: யோசனையில் ஆழ்ந்துவிட்டான் மதனன். அவனுடைய கருத்திலே சிதை பிடிபடவில்லை. "நான் எப்படி எழுதப் போகிறேன்' என்று திகைத்துப் போய்த் துாரிகையைக் கீழே வீசிவிடுகிருன்.

கம்பன் இப்படி ஒரு கற்பனையைச் செய்கிருன். இராமனும் இலக்குவனும் விசுவாமித்திர முனிவருடன் மிதிவிலக்குச் செல்கிருர்கள். அதை அணுகிக்கொண்டிருக் கிருர்கள். 'சீதை இருக்கும் பொன்மதில் மிதிலைக்குள் அவர்கள் புகுந்தார்கள்' என்று சொல்லும் இடத்தில் சீதை இத் தகையவள் என்று பாடுகிருன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/224&oldid=523426" இலிருந்து மீள்விக்கப்பட்டது