பக்கம்:அழியா அழகு.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்டதும் காணுததும் 21.9%

டிருந்தபோது அவர்கள் தங்கியிருந்த குடிலிலிருந்து சீதை. வெளிவருகிருள். அவளேக் கண்டவுடன் அவளுடைய பேரெழிலில் சொக்கிப் போகிருள் அரக்கி, இராமனேயும் சீதையையும் மாறி மாறிப் பார்க்கிருள். "ஆணழகுக்கும் பெண்ணழகுக்கும் தலைவரம்பாகப் பிரமன் படைத்த: அற்புதப் படைப்பு இவர்கள்' என்று வியக்கிருள்.

பொருதிறத் தானே கோக்கிப்

பூவையை நோக்கி கின்ருள்: 'கருதமற் றினிவே றில்லை;

கமலத்துக் கடவுள் தானே ஒருதிறத் துணர நோக்கி

உருவினுக் குலக மூன்றின் இருதிறத் தார்க்கும் செய்த

வரம்பிவர் இருவர்' என்ருள். '

இராமனையும் சீதையையும் மாறி மாறிப் பார்த்து. வியர்து, அப்படியே சின்றுவிடுகிருள். பிரமன் படைத்தக் தலைவரம்பு என்று தனக்குள்ளே சொல்லிக் கொள்கிருள். எதற்கு வரம்பு? அவள் அவர்களின் ஒழுக்கத்தை எண்ண வில்லை; பண்பை கினைக்கவில்லை. புறவடிவாகிய உருவினத் தான் நோக்கிளுள். உருவினுக்கு உலக மூன்றின் இருதிறத் தார்க்கும் செய்த வரம்பு' என்றுதான் அவளுக்குத் தோன்று: கிறது. பாவம்! அவர்கள் குண உருவத்தை உணரும் பாக்கியம் அவளுக்கு இல்லை! X

2

இராவணன் சீதையை நிலத்தொடும் பறித்துச் சென்று அசோகவனத்தில் வைத்துவிடுகிருன். இராமன்

1, சூர்ப்பனகைப் படலம், 62.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/227&oldid=523429" இலிருந்து மீள்விக்கப்பட்டது