: 220 அழியா அழகு
சீதையைப் பிரிந்து புலம்புகிருன், கிட்கிங்தைக்கு வந்து அநுமனேக் கண்டு, சுக்கிரீவனே நண்பனுக்கிக் கொண்டு
வாலியை வதம் செய்கிருன். இனிச் சீதையைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது.
வாணர மன்னனுகிய சுக்கிரீவன் தன் படைகளாகிய குரங்குகளைப் பல திசைக்கும் சென்று சிதையைத் தேடும் படி ஏவுகிருன். அநுமனேயும் வேறு சிலரையும் தென் திசைக்குப் போகச் சொல்லுகிருன். அவன் அவ்வாறு ஏவின. பிறகு இராமன் அநுமனேத் தனியே அழைத்துச் சீதையின் அங்க அடையாளங்களேயும், அவளைச் சந்தித் தால் அவளுக்கு கினைப்பூட்டும் அடையாளங்களையும் கூறித் தன் கணேயாழியையும் கொடுக்கிருன்.
இங்கே இராமன் அடிமுதல் முடியின்காறும் சிதையின் எழிலே வருணிக்கிருன். இராமனேடு இணைபிரியாது வாழ்ந்த காலத்தில் சீதை எழில் சிரம்பியவளாக இருக் தாள். காட்டுக்கு வந்ததல்ை அவளுடைய வாழ்க்கையில் அதிக வேறுபாடில்லை. அயோத்தி வாழ்க்கையைவிட ஆரணிய வாழ்க்கை இராமனேயும் சீதையையும் பின்னும் கெருங்கச் செய்தது. எனவே அவளுக்குக் கவலையும் குறை யும் இல்லை. அவள் தன் முழு அழகின் பொலிவோடும் விளங்கிள்ை. அந்தப் பூரணப் பேரெழிற் கோலத்தில் சிதையைப் பார்த்தவன் இராமன். அந்த எழிலேயே அநும
னுக்கு விரித்துச் சொல்கிருன்.
இராமன் தன் மனேவியின் உடல்ாலங்கள் யாவற் .றையும் வேறு ஒர் ஆண்மகனுக்கு இப்படி எடுத்துச் சொல்லலாமா என்ற ஐயம் சிலருக்கு எழலாம். அதற்கு இரண்டு வகையில் சமாதானம் உண்டு. ஒன்று அநுமனு டைய இயல்பு பற்றியது. மற்ருென்று இராமனுடைய