பக்கம்:அழியா அழகு.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்டதும் காணுததும் 2213

மனநிலையைச் சார்ந்தது. மருத்துவனுக்கு ஒன்றும் ஒளிக்கக் கூடாது என்பார்கள். அவ்வாறு, கெட்டுப்போன பொருளேத் தேடச் செல்லும் அநுமனுக்கு அடையாளம் முழுவதும் தெரியவேண்டும் என்று கூறப் புகுகிருன் இராமன். அவற்றைக் கேட்கிற அநுமன் இந்திரிய நிக்கிரகம் செய்த ஞானி. -

ஆறும் ஐம்பொறி நின்னையும் '

என்று சீதாபிராட்டியே சொல்லும்படி பொறிகள் அடங்கிய தூயவன் அவன். ஆதலின் அவனே மட்டும். தனியே அழைத்து இராமன் சொல்கிருன்.

நீண்டவனும் மாருதியை நிறையருள்ால் உறகோக்கி, "நீதி வல்லோய்,

காண்டியெனிற் குறிகேட்டி' எனவேறு

கொண்டிருந்து கழற லுற்றன் :

என்பதில். "வேறு கொண்டிருந்து கழறலுற்ருன்' என்று. இதனைத் தெளிவாகக் கம்பன் புலப்படுத்துகிருன். இது: மாருதியின் பண்பு பற்றிய சமாதானம். -

இராமன் சீதையைப் பிரிந்த துயரத்தில் ஆழ்ந்திருக் கிருன். சீதையை கினேப்பூட்டும் எந்தப் பொருளேக் கண் டாலும் குமைந்து வாடிப் புலம்புகிருன் துயரில் ஆழ்ந்த வர்களுக்குத் தம் துயர்க்காரணத்தை யாரிடமேனும் சொல்லும் வாய்ப்புக் கிடைக்குமானல், கடல்மடை திறக் தாற்போல் அவ்வளவையும் கொட்டிவிடுவார்கள். அவ்வாறு சீதையைப்பற்றிச் சொல்லத் தொடங்கிய இராமன் முறுகிய துயர கிலேயில் இது சொன்னல் போதும் என்று எண்ணுமல் முழு அடையாளங்களையும் கொட்டிவிடுகிருன்,

1. சூடாமணிப்படலம், 19. 3. நாடவிட்ட. 32.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/229&oldid=523431" இலிருந்து மீள்விக்கப்பட்டது