உவகையின் உருவம்
மனிதனுடைய உள்ளத்தே தோன்றும் உணர்ச்சிகளே அவனுடைய முகம் குறிப்பாகப் புலப்படுத்தும். "அகத்தின் அழகு முகத்தில் தெரியும்” என்ற பழஞ் சொல்லே நாம் கேட்டிருக்கிருேம். முகத்தில் தெரிவது மட்டும் அன்று; உடம்பிலும் தெரியும். ஒருவனுக்குச் சினம் உண்டாகிறது. அப்போது அவன் கண் சிவக்கிறது; உடம்பு பதறுகிறது; சொற்கள் வேகமாக வருகின்றன. இவை சினத்தின் விளை வாகத் தோன்றுபவை. கோபத்தினல் அவன் வெடிபடப் பேசும்போது அவனுடைய மொழியை உணர்ந்தவனுக்குத் தான் அவன் சினம் கொண்டுள்ளான் என்பது தெரியும் என்பது இல்லை. அம்மொழியைத் தெரிந்து கொள்ளாதவர் களும் அவனுடைய பேச்சின் ஒலியிலிருந்தும் படபடப் .பிலிருந்தும் அதனை உணர்ந்து கொள்வார்கள்.
வாயிலிருந்து வரும் சொற்கள் அவ்வம் மொழி பேசுவோரிடம் வெவ்வேருக இருக்கலாம். ஆனல் முனகல், அழுகை, சிரிப்பு ஆகிய ஒலிகள் மனித குலத்துக்கே பொது வானவை. அப்படியே படபடப்பு, கண் சிவத்தல் முதலிய அடையாளங்களும் பொதுவானவையே, உள்ளத்தில் தோன்றிய உணர்ச்சிகளே உடம்பில் உள்ள உறுப்புக்கள் இயற்கையாகவே வெளிப்படுத்துகின்றன. இவற்றை மெய்ப்பாடு என்பார்கள். மெய்யிலே தோன்றுவது என்பது அதன் பொருள். பாவம் என்று வடமொழியிலே