பக்கம்:அழியா அழகு.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 அழியா அழகு

இராமன் கூறிய அடையாளங்களே அநுமன் கேட் கிருன். கெட்டுப்போனவரைத் தேடுபவர்களிடம் அவரு டைய கிழற்படத்தை அடையாளம் காணக் கொடுப்பது போலத் தன் சொல்லாலே ஓர் ஓவியத்தை அநுமன் உள்ளத் தில் தீட்டிவிடுகிருன் இராகவன். அதனைத் தன் கருத்தில் வைத்துக்கொண்டு இலங்கை செல்கிருன் அநுமன்,

3

இலங்கையில் பல இடங்களிலும் அவன் தேடுகிருன். புகை புகா வாயிலெல்லாம் புகுந்து தேடுகிருன். சிதை யைக் காணவில்லை. இராவணன் அரண்மனைக்கு வருகிருன். அந்தப்புரத்தில் மண்டோதரி படுத்திருக்கும் இடம் சென்று பார்க்கிருன். புறக்கண்ணக் கொண்டு பார்க்கையில் அவள் தான் சீதையோ என்று ஒரு கணம் எண்ணிப் பதறிப் போகிருன், பின்பு சற்றே நிதானிக்கிருன். 'கண்டு கண்ணுெடு கருத்தொடு உசாவினன்.” இவள் மனித உருவுடையவள் அல்லள். கனவில் எதோ உளறுகிருள். சீதை இப்படி இருக்கமாட்டாள்" என்று தெளிகிருன். அவன் உள்ளத்தே எடுத்துச் சென்ற சிதையின் படத் திற்கும் மண்டோதரியின் உருவத்திற்கும் சில ஒப்புமைகள் இருந்தமையால்தான் அவன் முதலில் ஏமாந்து போனன்.

"இலக்கணங்களும் சில உள. :

என்று அவன் எண்ணுவதாகக் கம்பன் சொல்கிருன்.

அநுமன் மீண்டும் தேடத் தொடங்கிக் கடைசியில் அசோகவனத்தை அடைகிருன். அங்கே சீதையைக் காண் கிருன் இராமன் கூறிய சீதையா அங்கே இருக்கிருள்?

1. ஊர்தேடு, 198. 2. ஊர்தேடு, 202,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/230&oldid=523432" இலிருந்து மீள்விக்கப்பட்டது