பக்கம்:அழியா அழகு.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்டதும் காணுததும் 227

'இராமன் கண்டதும் நமக்குச் சொன்னதுமான வள வெழில் உருவம் இங்கே இல்லை. இங்கே உள்ள எழில அவன் காணவில்லை. அவன் சொன்ன உருவமே இங்கே இல்லே. சீதையின் பண்புருவத்தைத்தான் இங்கே காண்கி ருேம். இந்தப் பண்பின் தனி உருவத்தை அவன் கண்டிருக் தால் அவன் வேறு வகையில் வருணித்திருப்பான். அந்தப் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அவனுக்குக் கிடைக்க வில்லே' என்று அவன் எண்ணமிடுகிருன்.

'பேணநோற் றதுமனைப்

பிறவி, பெண்மைபோல் காணம்கோற்று உயர்ந்தது

கங்கை தோன்றலால்; மாணநோற்று ஈண்டிவள் இருந்த வாறெலாம் காணகோற் றிலன்அவன்

கமலக் கண்களால்,' " "குணஞ்சிறந்த இந்தப் பெருமாட்டி அவதாரம் செய்த லால் கல்ல இல்லில் பிறந்த குடிப்பெருமை எல்லோராலும் பாராட்டிப் போற்றுவதற்குரிய தவத்தைச் செய்திருக் கிறது. பெண் இயல்பும் தவஞ்செய்து உயர்ந்திருக்கிறது. அதுபோலவே காணமும் உயர்ந்து விட்டது. தன் உடல் வளம் சுருங்கியும் மேலும் மேலும் பண்பினுல் மாட்சிமை பெறத் தவம் புரிந்து இங்கே இப்பெருமாட்டி இருக்கும் வண்ணத்தை யெல்லாம் அந்த இராமன் தன் கமலம் போன்ற கண்களால் காணத் தவஞ்செய்யவில்லை' என்று அநுமனுடைய உள்ளம் எண்ணிப் பார்க்கிறது.

அநுமன், சீதையிடம் தன்னை இன்னனென்று கூறி, இராமன் கூறியவற்றையும் சொல்கிருன். பின்பு அசோக

1. காட்சிப், 73,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/235&oldid=523437" இலிருந்து மீள்விக்கப்பட்டது