பக்கம்:அழியா அழகு.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்டதும் காளுததும் 229.

'இற்பிறப்பு என்ப தொன்றும்

இரும்பொறை என்ப தொன்றும் கற்பெனும் பெயர தொன்றும்

களிகடம் புரியக் கண்டேன்,' "

'கற்குடிப் பிறப்பும், பெரிய பொறுமையும், கற்பென்று: புகழுடைய ஒன்றும் ஆகிய மூன்று குணங்களும் களிக் கூத்தாடிக் கொண்டிருப்பதைக் கண்டேன்' என்கிருன்.

'புறக்கண்ணுல் காணும் காட்சியினல் சீதையை அடை. யாளம் கண்டுகொள்ள ே கொடுத்தாயே, அந்தப் படம் அங்கே பயன்படவில்லை. அகக் கண்ணுல் அவளைப் பார்க் தேன். கண்ணெனும் பலகணி வழியே பார்த்தேன். உள்ளுறை உருவைக் கண்டேன். இற்பிறப்பு, பொறை, கற்பு என்ற மூன்றையும் கண்டேன்' என்பது போலச் சொல்கிருன். -

புறக்கண்ணிலே கண்ட சிதையின் உருவம் மெரு. கழிந்து பொலிவிழந்து துயரமே கோலமாக இருந்தது. ஆனல் அகக்கண்ணிலே கண்ட சீதையின் பண்புகளோ முன்னே யினும் பொலிவு பெற்று விளங்கின. இப்போது களிகடம் ஆடின. ஊன் உருக உருக, உள் ஒளி பெருகியது. ஆகவே அவன் கண்டது குணியை அல்ல; குணத்தையே கண்டான். புற உறையை அன்று; உள் இருந்த மணியையே கண்டான்.

எப்படிக் கண்டாய்?" என்ற கேள்விக்கு முன்பே' "கண்களால் கண்டேன்' என்று சொல்லிவிட்டான். அந்தக் கண்களில் இராமனேயே எதிர்நோக்கும் கற்பைக் கண்டான். அப்படிக் கண்ணின் வழியே கருத்தைக் காணுகையில் அங்கும் இராமன் வீற்றிருப்பதைக் கண்டாம்ை.

1. சுந்தர. திருவடி தொழுத. 29.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/237&oldid=523439" இலிருந்து மீள்விக்கப்பட்டது