பக்கம்:அழியா அழகு.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவகையின் உருவம் 23.

ஒதை என்பதற்கு ஆரவாரம் அல்லது ஓசை என்று பொருள். அவள் தன்னை மறந்து ஏதோ சத்தம் போடு கிருளே ஒழிய வார்த்தையாக ஒன்றும் சொல்லவில்லே. அங்கே சிகழ்ந்த நிகழ்ச்சியினலே பிறந்த உவகை, வெள்ள மாகப் பரந்துவிட்டது. சீதையின் முன் நிற்கையில் அது பின்னும் கரை கடந்து பொங்குகிறது. அதற்கு ஒர் எல்லே தோன்றில்ைதானே அவள் தன் உணர்வு பெறுவாள ? அங்கமிலா உவகை வடிவாக கிற்கிருள். அந்தமில் உவகையள். சத்தமிடுகிருள்; ஆடுகிருள்: பாடுகிருள். அவளுக்கு உவகை என்னும் பித்தமே பிடித்து விட்டது. வந்தடி வணங்கிலள்; வழங்கும் ஒதையள்: அந்தமில் உவகையள்; ஆடிப் பாடினள் ஆவேசம் வந்தவளேப்போல அவள் செய்யும் ஆரவார மும் ஆட்டமும் பாட்டமும் அவள் உள்ளத்தில் பொங்கிய உவகையின் மெய்ப்பாடாக வருபவை.

சீதை அவளைப் பார்க்கிருள். அவளுக்கு மனித உள்ளத்தின் இயல்பு கன்ருகத் தெரியும். 'இவள் பழைய நீலமாலேயாக வரவில்லை. உவகையே உருவமாக வந்திருக் கிருள். இவள் சிந்தையில் கரை கடந்து பொங்கும் உவகையே இப்படி இவளே ஆட்டிவைக்கிறது. அதற்குக் காரணமாக ஏதோ ஒரு சிகழ்ச்சி நடந்திருக்கிறது' என்று ஊகித்துக் கொள்கிருள். மெல்ல, "ஏ. சுந்தரி உன் சிங்தையில் உள்ள மகிழ்ச்சியையும் அதற்குக் காரணமாக .கிகழ்ந்த செய்கையையும் சொல் அம்மா' என்று கேட்கிருள்.

சிந்தையுள் மகிழ்ச்சியும் புகுந்த செய்தியும் சுந்தரி! சொல்என. - (புகுந்த - நிகழ்ந்த சுந்தரி: விளி; சீதை என்றும் கொள்ளலாம். என - என்று சீதை சொல்ல.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/31&oldid=523233" இலிருந்து மீள்விக்கப்பட்டது