இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
உவகையின் உருவம் 25
வந்தடி வணங்கிலள்: வழங்கும் ஒதையள்; அக்தமில் உவகையள்; ஆடிப் பாடினள்; "சிந்தையின் மகிழ்ச்சியும் புகுந்த செய்தியும் சுந்தரி சொல்'எனத் தொழுது சொல்லுவாள்.
கம்பன் படைத்த பெரிய பாத்திரங்களின் உருவத் தைப் பல இடங்களில் பல கோணங்களில் பார்க்கிருேம். அவன் படைக்கும் சிறிய பாத்திரமும் உயிருடையதாக, உணர்வுடையதாக, அற்புத சித்திரமாக. ஓவியனேயும் ஏமாற்றும் இயல்புள்ளதாக அமைந்து விடுகிறது. நீல மாலேயின் உருவம் அத்தகையது தானே? -
"அவள் என்ன சொன்னுள்?" என்ரு கேட்கிறீர்கள்? அதைப்பற்றி இப்போது நமக்குக் கவலே இல்லை.