பக்கம்:அழியா அழகு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுகச் செவ்வி 27'

தசரதன் சொல்லமாட்டாளுதலின் தானே சொல்வதாக வருகிருள்:

நாயகன் உரையான் வாயால்,

ாான்.இது பகர்வேன் என்னுத் தாயென நினைவான் முன்னே

கூற்றெனத் தமியள் வந்தாள். அவளைக் கண்டவுடன் மண்ணுற வணங்கி, வாயைக் கையால் பொத்தி, ஆடையைக் கையால் மடக்கிக் கொண்டு நெகிழ்ந்து நிற்கிருன் இராமன். இரும்பில்ை இயைந்த நெஞ்சையுடைய கைகேயி அவனைப் பார்த்து, 'உன் தந்தையார் கூறிய ஒன்றை உனக்கு உரைக்க வேண்டும்' என்கிருள். 'என் தங்தையார் ஏவ நீங்கள் சொல்வது ஒன்று உண்டானல் எனக்கு வந்த பேறுதான் என்னே! நான் உய்ந்தேன். தங்தையும் தாயும் நீங்களே. நீங்கள் சொல்வதுபோல நடக்க ஆயத்தமாக இருக்கிறேன். பணியுங்கள்' என்று இராமன் கூறுகிருன். அப்போது அவள் கூறுவதாகக் கம்பன் அமைத்திருக்கும் பாடல் தமிழர்களுககுப் புதிதன்று.

ஆழிசூழ் உலகம் எல்லாம்

பரதனே ஆள கீபோய்த் தாழிருஞ் சடைகள் தாங்கித்

தாங்கரும் தவமேற் கொண்டு பூழிவெங் கானம் கண்ணிப்

புண்ணியத் துறைகள் ஆடி ஏழிரண் டாண்டின் வாஎன்

றியம்பினன் அரசன் ” என்ருள். "இந்த உலகமெல்லாம் பரதனே ஆள், t காட்டுக் குச் சென்று பதினன்கு ஆண்டுகள் இருந்துவிட்டு வா’’’ என்று அவள் சொல்கிருள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/35&oldid=523237" இலிருந்து மீள்விக்கப்பட்டது