பக்கம்:அழியா அழகு.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுகச் செவ்வி . 33

ஆணுடைய திருமுகச் செவ்வியின் திறத்திலும் அவ்வாசகம் உணரக் கேட்ட அப்பொழுது இருந்த சிலை நுட்பமானது: அசற்கு முன்பு ஒரு கிலே, பின்பு ஒரு சில: ஆகிய இரண்டு நிலைகளும் பலர் அறியும் தன்மையை உடையன. அலர்ந்த தாமரை மலரை அந்த இரண்டு கிலேகளிலும், அதாவது கைகேயி உரைத்த சுடுசொல்லைக் கேட்பதற்கு முன்பும், அதைக் கேட்டதற்குப் பின்பும் இராமனுடைய திருமுகம் ஒத்திருந்தது. ஆனல் அவள் கூறிய வாசகத்தைக் கேட்ட அப்பொழுது செக்தாமரையை வென்று விட்டதாம். அப்படி, யானுல் இராமன் அவள் கூறியவற்றைச் சரியாகக் கேட்க வில்லையோ? என்ற ஐயத்துக்கு இடம் இல்லை. அவள் வார்த்தைகளின் பொருளையும் அவற்றினூடே தோற்றும் அவளுடைய உள்ளக் கிடக்கையையும் கன்ருக உணர்ந் தான், அவ்வாசகம் உணரக் கேட்டான். இராமனுடைய திருமுகம் முன்பும் பின்பும் தாமரையை ஒத்திருக்க, அச் சு டு சொல்லேக் கேட்டபோது பொலிவு மிகப் பெற்றுத் தாமரையின் அழகையே வென்றுவிட்டது.

...............யாரும் செப்பருங் குணத்தி ராமன்

திருமுகச் செவ்வி கோக்கின், ஒப்பதே முன்பு, பின்பு அவ்

வாசகம் உணரக் கேட்ட அப்பொழுது அலாந்த செக்தா

மரையினை வென்ற தம்மா! ஒப்பதே முன்பு: அதன் பின்பு அவ்வாசகம் உணரக் கேட்ட அப்பொழுது என்று பினபாகிய அப்பொழுது எனக் கூட்டியும் பொருள் உரைக்கலாம். ஆனல் அதில் இந்தச் சறப்பு இல்லை. வ. 3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/41&oldid=523243" இலிருந்து மீள்விக்கப்பட்டது