34 அழியா அழகு
முன்பு அவன் திருமுகம் தாமரையை ஒத்திருந்தது. என்பதற்குப் பல மேற்கோள்கள் கூறலாம்.
இராமன் கடலிலே ருேண்ட மேகம் தன்பால் தாமரை மலர்ச்சி பெற்றதுபோலத் தோன்றுவதாகக் கம்பன் ஒரிடத்தில் பாடுகிருன், அவனுடள் மேருமலையைப் போல இலக்குவன் வருவானும்.
கடல்வரும் முகில்ஒளிர் கமலம தரைா வடவரை யுடன்வரு செயலென. மறையும் தடவுதல் அறிவரு தனிமுத லவனும் புடைதரும் இளவலும் எனங்கர் புகல்வார். ' தனக்கு எதிரே வரும் மக்களே வலியச் சென்று இராமன் முகமலர்ச்சியுடன் செளக்கியம் விசாரிப்பாளும். இந்தச் செய்தியைச் சொல்லும்போது, 'முகமாகிய தாமரை மலர் கருணேயினல் விளங்கப் பேசுவான் என்று கம்பன் பாடுகிருன். முதிர் கரு கருணேயின் முகமலர் ஒளிரா : என்பது ஒர் அடி. அங்கே முகமலர் என்ற தொடர், "ஒப்பதே முன்பு என்று சொன்னதற்குச் சான்று பகரும். இனி, பின்பும் தாமரை அம்முகத்துக்கு ஒப்பாக |கின்றது என்பதற்கும் அகச்சான்று உண்டு.
அசோக வனத்தில் இராமனைப் பிரிந்திருந்த சீதை தனியிருந்து முன்னே சிகழ்ச்சிகளை எண்ணி எண்ணி வெதும்புகிருள். பழைய கினேவுகள் ஒன்றன் பின் ஒன்ருக அவள் அகக்கண்ணில் தோன்றுகின்றன.
இதோ இராமன் வந்து முன்னே கிற்கிருன் தன் தந்தையார் தனக்கு முடிசூட்ட எண் ணி யிருக்கும் செய்தியைச் சொல்கிருன். அவள் உள்ளம்
1. திருவவதாரப் படலம், 134 2. ώς 135