பக்கம்:அழியா அழகு.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுகச் செவ்வி 37

கருகுமேயன்றி வெயிலுக்கு வாடாதது அது. அந்த வெட்பத்தைத் தாங்கும் ஆற்றல் அதற்கு எங்கிருந்து வந்தது? அதன் இதழ்களில் அந்த வன்மை இல்லை. பூம்பொய்கையில் இருக்கும் தாமரைக்குத்தான் வெயிலிற் பொலிவுறும் பொற்பு உண்டு. தனியே பறித்து வைத்தால் வாடும்.

அதன் பொலிவுக்குக் காரணம் என்னவென்று ஆராய்க் தால் உண்மை விளங்கும். பூவையும் இதழையும் விட்டு அப்பூ மலர்ந்த தண்டைப் பற்றிச் சென்ருல் கொடி தட்டுப்படும். கொடியையும் பற்றிச் சென்ருல் அதன் கிழங்கைக் காணலாம். அந்தக் கிழங்கு, தண்மை நிறைந்த சூழ்நிலையில் சேற்றுக்குள் இருக்கிறது. வெளியிலே உள்ள தட்ப வெப்பங்கள் அந்தக் கிழங்கைச் சார்வதில்லை. அதன் பாலுள்ள உரங்கான் நீரின்மேல் மிகக்கும் தாமரைக்குச் சுடு கின்ற வெயிலில் பின்னும் விட்டு விளங்கும் பொலிவைத் தருகிறது.

இராமனுடைய முககமலத்தின் பொலிவுக்கு மூலம் எது என்பதை ஆராய்ந்தால் அங்கும் ஒரு கிழங்கு இருப்பதை உணரலாம். களவெண்பாவில் ஒரு பாட்டு;

மெய்த்திருவந் துற்ருலும்

வெந்துயர்வர் துற்ருலும் ஒத்திருக்கும் உள்ளத்

துரவோனே

என்பது அது. கலம் விளேந்தாலும் தீங்கு விளேர்தாலும் இரண்டையும் ஒன்ருகக் கருதி ஒத்திருக்கும் உள்ளத் திண்மை படைத்தவனே என்பது இதன் பொருள். இந்த இரண்டு நிலைகளிலும் ஒத்து சிற்கும் இயல்பு உள்ளத்தின் உரத்தில் விக்ளவது; அதைச் சம கிலே என்று கூறுவர். இராமனுடைய இருதயக் கிழங்கின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/45&oldid=523247" இலிருந்து மீள்விக்கப்பட்டது