பக்கம்:அழியா அழகு.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 அழியா அழகு

உாம் அவனுடைய முகத்துக்குப் பொலிவை ஊட்டுகிறது. அகத்தின் மலர்ச்சி - துன்பத்திலும் இன்பத்திலும் ஒரு படியாக இருக்கும் மலர்ச்சி - முகத்தில் வெளியாகிறது.

அகம் சிறந்தவன் இராமன். அகத்தின் சிறப்பு, குணாலங்களால் அமைவது; குணங்களில் சிறந்தவன் இராமன். அவனுடைய அகமலர்ச்சியாகிய குணச் சிறப்பை உணர்ந்தவர்களுக்கு அவன் முகமலர்ச்சிக்குக் காரணம் தெரியும், சுடுவெயிலில் மிக்குப் பொலிவது தாமரை, சுடுசொல்வின் முன் அதனினும் மிக்குப் பொலிங் தது இராமன் திருமுகம். இதற்குக் காரணம் அவனுடைய உள்ளச்சிறப்புக்குரிய பண்புகள், அந்தப் பண்புகளே எடுத்துச் சொல்லல் இயலாது. அகப் பொலிவாகிய, மூலமும் சொல்வதற்களியது; முகப் பொலிவாகிய விளேவும் சொல்வதற்கரியது. -

அவன் திருமுகச் செவ்விக்குக் காரணம் அவனுடைய அகச் செவ்வியாகிய குணங்கள் என்பதைக் குறிப்பாகப் புலப்படுத்த எண்ணிய கம்பன்,

யாரும், செப்பருங் குணத்தி ராமன்

திருமுகச் செவ்வி நோக்கின் என்று கூறுகிருன். குணத்தைச் சொல்ல முடிந்தால் இதையும் சொல்ல இயலும், அதுவும் செப்பரியது. ஆத லால் இதுவும்,

இப்பொழுதெம்ம ஞேரால் இயம்புதற் கெளிதே? என்பது எவ்வளவு பொருத்தம்! -

கம்பன், தான் அகக்கண்ணில் கண்டுணர்ந்த காட்சி யைச் சொல்வதற்குமுன் தான் நுகர்ந்த அளவுக்கு அதனைச் சொல்லால் வடிக்க இயலாது என்று இரங்குகிருன். இது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/46&oldid=523248" இலிருந்து மீள்விக்கப்பட்டது