பக்கம்:அழியா அழகு.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iv.

யைப் புதிய ஆராய்ச்சிக் கண்கொண்டு சோதித்தார்கள். தமிழ்க் கண்ணுேடு பார்த்தவர்களுக்கும் பக்திக் கண் கொண்டு பார்த்தவர்களுக்கும் அது போற்றி இன்புறத் தக்க காவியமாகத் தோன்றியது போலவே, ஆராய்ச்சிக் கண்கொண்டு பார்த்தவர்களுக்கும் அது சிறந்த சுவையும் பாத்திரப் படைப்பும் கட்டுக்கோப்பும் உடைய காவிய மணியாகத் தோன்றியது; மேல் காட்டு ஆராய்ச்சிச் சூத்தி ரங்களேக் கொண்டு எடைபோட்டுப் பார்த்து மகிழ்ந்து, மக்களுக்குத் தங்கள் பாணியிலே கம்பன் கவிதைத் திறத்தை எடுததுச் சொல்லவும் எழுதவும் பலர் தலேப்பட்டார்கள். அமரர் வ. வே. சு. ஐயரவர்கள் கம்பனேயும் ஹோம ரையும் தாங்தேயையும் விர்ஜிலேயும் ஷேக்ஸ்பியரையும் மில்டனேயும் ஒரே சங்கப் பலகையில் வைத்து ஒப்பு கோக் கினர். சில இடங்களில் கம்பன் எட்டின கொம்பை மற்ற வர்கள் எட்ட முடியவில்லை என்று கண்டார். தம் கருத்தை ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதினர்.

அமரர் ரஸிகமணி டி. கே. சி. அவர்கள் தமிழை எப்படிச் சுவைப்பது என்பதைத் தெளிவாகக் காட்டியவர். அவர் கம்பன் கவிதையை ஆங்கிலங் கற்ற அறிஞர் உலகத் தில் விளையாடச் செய்தார். எழுத்துலகில் பூ பி புரீ. அவர்கள் பல ஆண்டுகளாகக் கம்பனே உலாவரச் செய் திருக்கிருர். வேறு அறிஞர்கள் பலர் கம்பன் கவிதை நயத் தையும் காப்பியத் திறனேயும் ஆய்ந்து எடுத்து எழுதியும் பேசியும் வந்திருக்கிருர்கள். அத்தகைய தொண்டுகள் இன்னும் கடந்துவருகின்றன. காரைக்குடியில் கம்பன் கவிதை அரியணை ஏறியது. இப்போது பல இடங்களிலும் கம்பன் விழா நடைபெற்றுவருகிறது. வரவரக் கம்பனுடைய கவிதையில் ஈடுபடும் மக்கள் பெருகிவருகிருர்கள்.

பல மேடைகளில் கம்பன் கவிச்சுவையைப் பற்றிப் பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததுண்டு. கம்பன் காப்பி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/5&oldid=523207" இலிருந்து மீள்விக்கப்பட்டது