பக்கம்:அழியா அழகு.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 அழியா அழகு

இப்போது கங்கைக் கரையை அடையப் போகிருன் இராமன். புதிய படலம், "கங்கைப் படலம்' என்ற பெய. ரோடு தொடங்குகிறது.

அதன் முதல்பாட்டைச் சற்று விரிவாக ஆராய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

2

நாடகத்தில் யாவும் பாத்திரங்களின் கூற்ருக அமை: யும்; காவியத்திலோ கவிஞன் கூற்றும் பாத்திரங்களின் கூற்றும் விரவி வரும். கவிஞன் கூற்றிலும் இரண்டு வகை உண்டு. கதையோடு தொடர்பாக நிகழ்ச்சிகளைச் சொல்லிக் கொண்டு போவது ஒரு வகை கதையைச் சற்றே கிறுத்தி. உலகுக்கு உபதேசம் செய்வது, தன் உணர்ச்சியை வெளி யிடுவது முதலிய வகையில் பாடுவது ஒருவகை. முன்ன தைக் கதையின் அகமென்றும், பின்னதைக் கதையின் புறமென்றும் சொல்லலாம். கம்பன் பல இடங்களில் இந்த இரண்டு முறைகளேயும் மேற்கொண்டு பாடியிருக்கிருன். கங்கைப்படலத்தின் முதற்பாட்டில் முதல் இரண்டடி. கதை நிகழ்ச்சியைச் சொல்வன. பின் இரண்டடி கம்பன் தன் உணர்ச்சியை வெளியிடுவன. - வெய்யோன்ஒளி தன்மேனியின்

விரிசோதியின் மறையப் பொய்யோஎனும் இடையாளொடும்

இளையாைெடும் போஞன்;. மையோ,மர கதமோ, மறி

கடலோ, மழை முகிலோ! ஐயோ! இவன் வடிவென்பதொர்

அழியாஅழ குடையான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/50&oldid=523252" இலிருந்து மீள்விக்கப்பட்டது