பக்கம்:அழியா அழகு.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

• 46 அழியா அழகு

ஆசையால் பின்னும் ஒன்றை அணிகிருேம் ஆடைகள் அதிக மாக வகைவகையாக நம்மிடம் இருந்தால் இந்த இரண் டோடு நிற்பதில்லே, மற்ருென்று, வேருென்று, பிறிதொன்று என்று ஒன்றைவிட ஒன்று சிறப்பாக இருக்கிறதென்று எண்ணி மாற்றி மாற்றி அணிவோம். இது மனித இயல்பு.

கம்பன் இப்படித்தான் செய்கிருன் மையை உவமை யாக்கினன். துணிவாகச் சொல்லாமல், மையோ!' என்று ஐய உணர்வோடு சொன்னன். அவனுக்குத் திருப்தி உண்டாகவில்லை. மைக்கு ஒளி ஏது? அது சிமிழில் அடங்குவ தாயிற்றே! அதையா சொல்வது? என்று அவன் கினேத்திருக்கக் கூடும். ஒளிபுடையதும் மதிப்புடையது மாக வேறு ஒன்றைச் சொல்லவேண்டும் என்று விரும்பி னன். அவனுக்கு இப்போது மரகதம் கினேவுக்கு வந்தது. "ஆம், சுடர் விடும் திருமேனிக்கு இதுதான் சரி' என்று எண்ணிச் சொல்ல வந்தான், அப்போதும் ஐயம் விட வில்லை,

மரகதமோ!

என்ருன்.

உறியிலே உள்ள தின்பண்டத்தைத் தாய் அறியாமல் எடுக்க விரும்புகிருன் குழந்தை. அது அவனுக்கு எட்டும் உயரத்தில் இல்லை. 'எப்படி அதை எடுப்பது? என்று தெரியாமல் திண்டாடுகிருன். கடைசியில் பக்கத்தில் இருந்த ஒரு முக்காலியை எடுத்துப் போட்டு அதன்மேல் எறி கின்று பார்க்கிருன் உறி எட்டவில்லை. மறுபடியும் கீழே இறங்கி உயரமான மண ஒன்றை எடுத்து முக்காலி யின்மேல் வைத்து மீண்டும் மேலே ஏறி அண்ணுந்து பார்க் .கிருன். இப்போதும் எட்டவில்லே. அருகில் கொப்பரை, தவலே என்று உள்ளவற்றை அடுக்குகிருன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/54&oldid=523256" இலிருந்து மீள்விக்கப்பட்டது